உண்மையாகவே பொய் தான் சொல்கிறேன்

உன்னை பார்த்தும்
பார்க்காததுபோல்
நான் நடிப்பது பொய்.......!

நீ காதல் சொல்ல வரும்போதெல்லாம்
நான் புற முதுகிடுவது,
உன்னை பிடிக்காததால் அல்ல......!
என் தோல்வியை ஒப்புகொள்வதால்......

நீ புன்னகைக்கும் போதெல்லாம்
நான் மௌனம் சாதிப்பது,
உன்னை பிடிக்காததால் அல்ல.....!
உன் புன்னகையை நிரந்தரமாக்க
திட்டம் தீட்டுவதால்.........

நீ என்னை ரசிப்பது தெரிந்தும்
தெரியாதது போல் நான் நடிப்பது பொய்....
உன் ரசனைக்கு நான் ரசிகையாக இருப்பதால்.......

இப்படி,
தினம் தினம் நமக்குள் நடக்கும்
இந்த காதல் யுத்தம்
ஒரு நாள் முடிவு பெரும்.......
அப்போது உன் ஆயுள் கைதியாய்
நான் சொல்ல போகும் ஓர் உண்மை உண்டு.......

அது......
நான் உன்னை
காதலிக்கிறேன்........!

எழுதியவர் : vidhya....... (17-Feb-14, 9:36 pm)
பார்வை : 266

மேலே