உனக்கான தனிமையின் காத்திருப்பு
உனக்கான தனிமையின் காத்திருப்பு
சுகமென்று அறிந்தேனடா
பாழாய் போன இந்த பகல் யாவும்
அழுக்கான உன் ஆடைகளுடனும்
எனக்கான தீராத உன் கவிதைகளுடனும்
தொலைந்து போனது
நீ வரும் நேரம் வந்த போதும்
வீடு வரை தாங்காத என் தவிப்பிற்கு
உன்னுருவம் வீதி முனை தெரிவது எப்போது
வா வாசல் வரை காத்திருக்கிறேன்....