காதல் கடிதம்

என் மொழி தமிழை போலவே,
விஞ்ஞான வளர்ச்சியில் ஒதுக்கப்பட்டது...
சிறிது சிறிதாய் மறக்கப்பட்ட ஒன்று...
உன்னால் முளைக்கிறது என்னுள்ளே..
அது வேறெதுவும் இல்லை...
"காதலன் காதலிக்கு எழுதும் காதல் கடிதங்களே"..!

உதவாக்கரை என்று அர்ச்சணைகள் வாங்கிய நான் இப்பொழுது கவிஞன் போல
கவி எழுதுகிறேன் உனக்காக...!

அதிகாலை விழித்திட
என் விழி இரண்டும்
தேடுதடி உன்னை...!

அந்தி மாலை பொழுது நெருங்கிட,
அரவணைக்க என் கைகள் இரண்டும்,
ஏங்குதடி உன்னால்...!

உன் கண்கள் காதல் விதையினை
என்னுள் விதைத்திட,
என் இரத்தினை பருகி முளைக்கிறது காதல்...!

ரணங்களையும் ரசிக்க தொடங்கினேன்...
என் இமைகளை மூட மறுத்திட்டேன்...
உன் நடை அழகை ரசிக்க தொடங்கினேன்...
"என் நடை பாதையாய்
உன் கால் தடங்களை பின் தொடர்ந்தேன்"

ஒரு வார்த்தை
நீ பேச தவம் கிடந்தேன்...
"அந்த ஒரு வார்த்தை
என் பெயராய் இருக்க வேண்டும் என்று
அந்த தவத்தினுள் வரம் கேட்டேன்"

கவிதைகள் படிப்பது என் பழக்கம்,
ஆனால் இப்பொழுது அவ்வரிகள் எல்லாம் நினைவுட்டுதடி உன் நினைவை...

"ஹ்ம்ம் என்று சொன்னால் உன் அரவணைப்பில் அமிர்தம் பருகி சாகாமல் வாழ்ந்திருப்பேன்"

"ஹும் ஹும் என்று சொன்னால் இடைவெளி வைத்து காத்திருபேன் அந்த வெற்றிடத்தை
விளைநிலமாக்க நீ வருவாய் என்ற மூட நம்பிக்கையில்"

பிழை இன்றி கவி எழுத நான் கவிஞன் அல்ல,
"இக்கவிக்கு அழகு சேர்க்க ஒரு பொய்யையும் துணைக்கு அழைக்கவுமில்லை"
பெண்ணே
என்னை கவிஞன் என அங்கீகரிக்க தேவை இல்லை,
"உன் கணவனாக விரும்புகிறேன்"
விண்ணப்பம் ஏற்கப்படுமா....
இல்லை நிராகரிக்கப்படுமா....!!!

எழுதியவர் : அரவிந்த் .C (17-Feb-14, 9:05 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 220

மேலே