தோழர் பொள்ளாச்சிஅபியின் பிறந்த நாள் இன்று
நன்று இந்த நாள் -ஒரு
குன்று உயர் நட்பு
இன்று பிறந்த நாள்
நின்று வாழ்த்தும் எழுத்து!!!!
கவிதைகளில் வாழ்வை செதுக்கும் சிற்பி
புவிதனில் புரட்சிக்கு முத்தளிக்கும் சிப்பி
பழக பழக பாசம் கொப்பளிக்கும் ஊற்று
தமிழில் நட்பை வளர்க்கும் நாற்று
காதலை வாழ்வாக்கிய கணவன்
ஓதலை ஒழித்த உயர் அப்பன்
மோதலை உதறும் நல் தோழன்
ஆதலினால் வாழ்த்துகிறேன் வாழ்க!!!!
இன்று எனது அபியின் பிறந்த நாள்!!!
நன்று இந்த நாள் -ஒரு
குன்று உயர் அபிக்கு
இன்று பிறந்த நாள்
நின்று வாழ்த்தும் 'எழுத்து ' !!!!