வாழ்கை பயணம்

வலையில் சிக்கி மீன்
சாவது உனக்காக....
அலையில் சிக்கி நீ
சாகிறாய் எதற்காக........
வாழும் உன்
பிள்ளை நோகுதடா....
வாழாமல் உன்
மனைவி சாகுதடா....
புயலாய் புறப்பட்டு
செல்லாதே
புயலில் சிக்கி நீ
மடியாதே...
வாழ்கை பயணம்
பெரியதடா
நங்கூரம் பாய்ச்சி
அதை நிறுத்தாதே.....
தந்திரமாய் யோசித்து
செல்வாயடா
சுதந்திரமாய் நீ
வாழ்ந்து கொள்வாயடா........