தமிழன்பன் ஐயா அவர்களுக்கு பாமாலை
அன்பரே ! தமிழன்பரே!!
தமிழாற்றலில் நீ செங்கோல்
எழுதுகோலில் உன் திறவுக்கோல்
கோலோச்சியது எழுபது நூல்.
மரபுக்கவிதையை ஆண்டவன் நீ
புதுக்கவிதைக்கு மன்னன் நீ
குறும்பாக்களில் கண்ணன் நீ
தமிழன்னையின் தலைமகன் நீ
பன்முகங்கொண்ட அழகனே -நீ
வரைந்த ஒவியமோ சிற்பம் !
படைத்த சிறுகதைகளோ காவியம் !
திறனாய்ந்த கட்டுரைகளோ கருவூலம் !
சொற்ப்பொழிவாளரே ! பேராசிரியரே !-நீ
சிலிநாட்டு மகாகவி பாப்தாதெருதாவை
கற்பனையில் நண்பனாக்கிய அதிசயப்பிறவி !
நற்சிந்தனைகளை படைக்கும் சிந்தனைசிற்பி !
வெள்ளைத்தாளுக்கு ஏனிந்த மோகம்? -உந்தன்
எழுதுகோலில் உள்ளதோ மந்திரம்!
எழுதுகோலுக்கு எப்படியிந்த ஈர்ப்புசக்தி ?- உந்தன்
மூவிரல்களால் வந்ததா காந்தசக்தி !
கவியரங்கத்தில் நீ கவிதைப்பாடினால் இந்த
புவியுருண்டையும் நின்று ரசித்துக்கேட்கும்! -உன்
புதுக்கவிதையை கர்ப்பிணி வாசித்தால்
கருவறையிலுள்ள சிசுகூட கைத்தட்டும்..!
விடிவெள்ளியே ! மகாகவியே !
சிரம்தாழ்த்தி உனை வணங்குகிறேன் !
...............................இரா.சந்தோஷ் குமார்.