பழமொழி புது மொழி

ஆலும் வேலும்
பல்லுக்கு உறுதி

மதுவும் மங்கையும்
மனிதனுக்கு கெடுதி ! ----1
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஆடிக் காற்றில்
அம்மியும் பறக்கும்

தென்றல் காற்றில்
காதல் மலரும் ! ----2
################################################
ஐயர் வரும்வரை
அம்மாவாசை காத்திருக்குமா ?

அம்மாவாசை நாளிலும்
அவளுக்காக காத்திருக்கிறான் ! -----3
################################################
கண் கெட்டபின்
சூரிய நமஸ்க்காரமா ?

கண் உள்ளவரை
காதலிக்கு நமஸ்க்காரம் ! -----4
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆடிப் பட்டம்
தேடி விதை

ஆடிப் பட்டம் ஆவணிப் பட்டம்
தைப் பட்டம் மாசிப் பட்டம் தேடுது கவிதை ! ----5

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Feb-14, 7:47 pm)
பார்வை : 2090

சிறந்த நகைச்சுவைகள்

மேலே