முதல் காதல்

முதல் காதல்
முற்று பெறும்முன்
தொடங்கி விடுகிறது
இரண்டாம் காதல்

"வாழை கன்றுக்கு"

==================================================

விண்ணின் காதல்
மண் மேல்

"முதல் மழை துளி "

===============================================

சூரிய காதல்
கந்தர்வ காதல்
இரவில் மட்டும்

"நிலா"

===============================================


ஆழ ஆழமாய்
காதலிக்கிறது
கடலை
"மீன்"
===============================================

பருவம் வந்ததை
பாங்காய் சொன்னது
"பள்ளி காதல் "

===============================================

பூமிக்கு ஒரு
காதல் கடிதம்
"உதிர்ந்த இலை"

===============================================

இன்னொருத்தியின்
காதலனையும்
ஏற்று கொண்டு
சிரிக்கிறாள்

"தேன் கொடுக்கும் பூ "

===============================================


கல்லறை காதல்கள்
வாழ்கின்றனர்

"இலக்கியங்களாக"

===============================================

என் கற்பனை
காதலன்

"கவிதை"

==============================================

கடவுளின் முதல்
காதல்

"மழலை "

எழுதியவர் : நிலா மகள் (21-Feb-14, 3:24 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 136

மேலே