இந்த நிலை மாறுமோ

''அநியாயம்''
************************
மொட்டுக்கள் கருகுவது
சிட்டுக்கள் சீரழிவது

''வேதனை''
****************
மண்வெட்டியேந்தும் அதிகாலை
மதுபாட்டிலேந்தும் மனிதன்...

''வெறுப்பு''
***************
நித்தம் நித்தம் தொடரும்
பெண்ணின் பேருந்துப்பயணம்

''ஆதங்கம்''
****************
எட்டாம்வகுப்பு மாணவியின்
அலைபேசி அலறல்கள் ...

''ஏக்கம்''
**************
யதார்த்தங்கள் வாழ்க்கையாகி
என்று மனிதம் புனிதமாகுமோ...

எழுதியவர் : லலிதா.வி (21-Feb-14, 4:13 pm)
பார்வை : 132

மேலே