குழந்தை பருவம்

குழந்தை பருவத்தின் சில நினைவுகள் :

*பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக்கை பார்ப்போம்.

*பக்கத்து வீட்டுக்குள்ள பந்த போட்டுட்டு அக்கா அக்கா எடுத்தாக்கான்னு கெஞ்சுவோம், எடுத்து தரலேனா அவங்க அசந்த நேரமா பாத்து சுவரேறி குதிச்சு எடுப்போம்.

*தட்டான் பிடிச்சு அத கல்லை தூக்க சொல்லி கொடுமை பண்ணுவோம்.

*மின்மினி பூச்சிய பிடிச்சு கண்ணாடி பாட்டில்ல அடைச்சு அதுக்கு இலைகள் உணவா போடுவோம். இலைய சாப்பிட்டு அது நல்லா வாழும்னு நெனப்போம்.. ஆனா கண்ணாடி பாட்டில் குள்ள காத்து போகாது, அதுனால சுவாசிக்க முடியாதுன்னு நம்ம மூளைக்கு எட்டாது.

*மண்ணை கொளப்பி சட்டி,பானை செஞ்சு விளையாடுவோம்.

*ஆடி மாசமாவே இருக்காது ஆனாலும் பட்டம் விட்டு விளையாடுவோம்.

*கிரிகெட் விளையாட தெரியலேனாலும் விளையாடுவோம், முக்கியமா அவுட் ஆனா ஒத்துக்கவே மாட்டோம்.

*பரமபதம் விளையாடும் போது நம்ம தோக்க போறோம்ன்னு தெரிஞ்சா போது ஆட்டத்த கலச்சு விட்டுருவோம்.

*ருசியே இல்லாட்டியும் ருசிச்சு சாப்பிடுவோம், நம்ம செஞ்ச கூட்டாஞ்சோற.

*கண்ணாமூச்சி ஆட்டம் ஆட கண்ண கட்டும்போது கண்ணு நல்லா தெரிஞ்சாலும் இல்ல எதுமே தெரியல ஒரே இருட்டா இருக்குன்னு கள்ளாட்டை விளையாடுவோம்.

*இரவுநேரம் கரண்டு போச்சுனா பேய் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் பயமுறுத்துவோம்.

*சைக்கில் ஓட்டி கீழ விழுந்தாலும் மண்ணை அள்ளி பூசிட்டு மறுபடியும் சைக்கிள் ஓட்டுவோம்.

*நீளமான துணிய கழுத்துல கட்டிக்கிட்டு பேட் மேன், சக்தி மான்னு சொல்லிக்கிட்டு குதிச்சு விளையாடுவோம்.

*தூங்குறதுக்கு மட்டும் தான் வீட்டுக்கு போவோம், மற்ற நேரம் முழுக்க தெருவுல தான் இருப்போம்.

‪#‎நம்ம‬ விளையாட்டுக்கள் அனைத்துமே நம்ம ஊரோட ஒட்டி இருந்தது. இப்ப நம்ம விளையாட்டுக்கள் அனைத்துமே நம் வீட்டு கணினியிலையும், செல் பேசிலையும் தான் இருக்கு.

எழுதியவர் : (21-Feb-14, 4:15 pm)
Tanglish : kuzhanthai paruvam
பார்வை : 156

மேலே