பெண்ணே
பெண்ணே உன்னைக் கண்டால்
பெண்ணிற்கும் காதல் தோன்றுமடி...
ஆஹா...
ஆண்டவன் படைத்த பொக்கிஷம்
நீ அல்லவா!!!
உன் கண்ணில்
கர்வத்தை தேடுகிறேன்,
என்ன ஒரு எளிமை...
ஆம் ஆம்
குளத்தில் கல்லை எறிந்தால்
குளம் தான் ஆடும்...
கடலில் கல்லை எறிந்தால்
கல் தான் காணாமல் போகும்...
சிற்பிகள் கூட
சிலையாகின்றன...
அதனுள் இருந்த முத்துக்கள்
உன் கழுத்தில் ஊஞ்சலாடும் போது...
நான் நினைக்கிறேன்
உன் வாழ்வில் இரவே
இல்லை என்று...
ஏன் என்றால்
கண்டிப்பாக நிலவு உன்னைப் பார்த்து
வெட்கம் கொள்ளும்...
சூரியன் உன்னைக் காண
ஒவ்வொரு நொடியும் பிறக்கும்...
உன் கருநீலக் கூந்தலை
காற்றில் கொஞ்சம் அசையாமல்
இருக்கச் சொல்,
ஒவ்வொரு முறையும்
அசையும் போது
என் மனதை
முள்ளாக குத்திச் செல்கிறது...
தனிமையை தோழியாகக்
கொண்ட நீ
அனைத்து இயற்கையையும்
உன் தோழியாக்கிக் கொண்டாயடி...
உன் பின்னால் இருக்கும்
செடிகள்
தன்னை தயாராக்கிக் கொண்டிருக்கிறது.
நீ பேசப் போகும்
வார்த்தைகளுக்கு இசையமைக்க...
உன் கைகளில் உள்ள
வளையல்களாய்
பிறக்க ஆசையடி,
நீ கைகளை ஆட்டி
பேசும்போதெல்லாம்
உன்னோடு பேச...
போதும் பெண்ணே
உன் கண்களை மூடிக்கொள்
என்னால் முடியவில்லை...
நானும் பெண்தான்....