நெய்தல் நில மக்களின் வாழ்க்கை

வாய வயித்த கட்டி வாழ்க்கைய அடகுவச்சி
கட்டு மரம் வாங்கி கடலுக்கு போனவரு
போகும்போது காதலோடு சிரிச்சவரு கைப் புள்ளையை கொஞ்சியவரு - திரும்பி வந்து தங்கைக்கு வரும் தையிலே மாப்பிள்ளையை
பாக்குறேன்னு சொன்னவரு .................

இதயத்தில் இருந்த நல்லவரு பெத்த தாய்க்கு
மகனா வாழ்ந்தவரு இருண்ட என் வாழ்கைக்கு
விளக்கா இருந்தவரு கோபம் இல்லா மன்னவரு
ஒரு சுடு சொல் சொல்லாத வல்லவரு
கட்டு மரம் தள்ளிகிட்டு கடலுக்கு போனவரு ...........

வருவாரு ....வருவாரு என்று கரையிலே காத்திருந்தேன் - வந்த கட்டு மரங்களை எல்லாம்
என் ராசாவப் பத்தி கேட்டிருந்தேன் - கடலுக்கு
போன மச்சான் காணாம போயிட்டாருன்னு
கடலுக்கு போன வங்க வந்து சேதி சொன்னாங்க

காத்து வந்து அடிச்சதோ ..என் ராசாவே - உப்பு
கடல் தண்ணீ தான் மொண்டு போனதோ -எப்ப
வந்து சேருவே.! சூரியன் மறஞ்சாளும் விடிஞ்சாலும் - உன் நினைவு வந்து வந்து இந்த உசுர வேகவச்சிட்டு போகுதே - நீ போன விலாசத்த இந்த மண்ணையும் கடல் மணலையும் கேட்டுப் பார்த்தேன் -கடல் அலையிடமும் கேட்டுப் பார்த்தேன்..! ஆழ் கடல் வாழ் உயிர்களிடமும் கேட்டுப் பார்த்தேன்...................................!

காவல் துறை யிடமும் கேட்டு பார்த்தேன் -ஆளும்
அரசிடமும் கேட்டுப் பார்த்தேன் -அத்தனைப் பேரும் கைவிரித்தார்கள் - கரையிலே உப்புக்
கண்ணீரோடு காத்துக் கிடந்தேன் ....................!

கடலுக்குப் போனவரு பொணமாத் தான்
வந்து சேந்தாரு- சிங்களப் பேய்களால்
சிதைந்துத் தான் போனாரு - இப்போ
தமிழக கடற்கரையில் கடல் மணலை விட
தாலி அறுத்த தமிழ் பெண்கள் தான் அதிகம்

நெய்தல் நிலத்து மக்களின்
நொந்து போன வாழ்க்கை இது ........!
குந்தி தின்று கும்பி நிறைந்து போனவர்களே ..!
இதை கொஞ்சம் நீங்கள் சிந்தியுங்கள் ....!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (22-Feb-14, 6:32 am)
பார்வை : 2612

மேலே