பெருமைமிகு இந்தியா
விந்தியம் முதல் குமரி வரை
விரிந்தே கிடக்கும் என் தேசம்!
பந்த பாசமுடனே பரிந்து பேசிடும்
எங்கள் சமூகம்!
சாதிகள் சண்டை இங்குண்டு!
மதங்களுகிடையே கருத்துகள் வேறுண்டு!
எங்களுக்குள்ளே எல்லா சிக்கலும் இருந்தாலும்
வெளிதேசத்தினரின் தலையீடை விரும்பேன்!!
போர் என வந்தாலே எங்கள் சிக்கலை மறந்து
தோள் கொடுப்போம் ஒற்றுமை உணர்வை
ஒரு போதும் உடைத்திட விடோம் !!
எங்களுக்கு பல தலைமை உண்டு ..!
நல்ல தலைவர்களை தந்த நாடு...!
இன்றும் அவர்கள் காட்டிய பாதையில்
பயணிப்போம் புது வழி அறியாமலே...!!
இன மொழி கலவரம் தினம் உண்டு!
கயவர்கள் சூழ்ச்சியில் விழுந்ததுண்டு!
பல பல ஊழல் செய்தாலும்
வேறு தலைவருக்கு வழி விடோம்...!!
சாலைகள் தோறும் மறித்திடுவோம்!
காளி குடங்களை முன் வைப்போம்!
அரசு சொத்துக்கு தீ வைப்போம்!
சின்ன பிரச்னை என்றாலும்
நியாயம் கிடைத்திட போராடுவோம் !!
அரசியல் தலைவரை வெறுத்திடுவோம்!
ஊழலை போட்டு உடைத்திடுவோம்!
நீதியை கேட்டு போராடி !
வீதி தோறும் ஊர்வலமாய் !!
வெறுத்து பேசி முழக்கமிட்டு!
உருவ பொம்மை எரித்திடுவோம்...!!
தேர்தல் வரும் போது பதில் உரைப்போம் -என
உறுதி ஏற்று பின் களைந்திடுவோம்!
தலைவர்கள் ஊர்வலம் வருவார்கள்!
தலைகொரு பரிசாய் தருவார்கள்!!
ஊழலை மறந்தே வாக்களிப்போம்!
மீண்டும் அவரை தேர்ந்தெடுப்போம்!
இயற்கை சீற்றம் எங்கு வந்திடுனும்
வாரி கொடுக்கும் முதல் ஆளாய்...!
இந்தியா மக்கள் நாம் தானே!
எட்டுக்கு பத்து வட்டி கேட்டாலும்
உலக வங்கியில் கடன் வாங்கி...
தேச தலைவரின் குடும்பத்தை காப்போம்!!
ஏழை குடிலை எரித்தே தலைவன்
நிவாரணம் தந்திட வருவாரே!
எங்கள் தெய்வம் என்றே நாங்கள்
இதயத்தில் தூக்கி சுமப்போமே!!
இத்தனை பெருமை மிகு என் நாட்டை
காட்டி கொடுத்தாலும் நான் மறவேன்!!
கூலுக்கு வழியில்லை!வேலைக்கு இடம்இல்லை!
கட்சி கூட்டதில் கலந்து பிழைக்கிறோம்!
பிரியாணி பொட்டலத்தை ருசிக்கின்றோம்!
இவ்வளவு பணமும் யாருதென்று
எண்ணி பார்த்திட மறக்கின்றோம்!!
இது இந்தியா தேசத்தின் பெருமையடா !
சொல்லிட எனக்கு பொறுமை இல்லையடா!!