நீ யாரடி
சீரும் அடியும் ....
சீரடி ...
சிந்தை மயக்கும் நீ ...
யாரடி ...
சித்தம் கலைப்பது...
ஏனடி ...
உன் திட்டம் என்ன ....
கூறடி ...
கடைக்கண் பார்வையில் ...
மன மடை தாழ் திறக்கும் ...
மந்திர மகளா
இடுக்கண் தந்து இம்சைகள் ரசிக்கும்
மாயவன் வலையா...
மனத் தடை தாண்டியே ....
உன் படை நுழைவது
என் ஆண்மையின் குறையா .....
பெண்மை உன் காதல் பசிக்கு
நான் என்ன இரையா.....
அதிரடியாய் போர் தொடுத்தல் ....
மங்கை உன் சதியா....
நிராயுத எனை போருக்கு அழைப்பது.......
மனு தர்ம விதியா .....