தொழல் செய்தாள் என் காதலை

நிழல்
என்னை காதலித்து
அவள்
நினைவு என்னை காதலித்தது..!!
அழல்
என்னை காதலித்து
அவள்
அன்பு என்னை காதலித்தது..!!
கழல்
கொண்டது அவள் மனம்
கனம்
கொண்டது அவள் இதயம்..!!
விழல்
ஆனாள் என்னுள்
மடல்
தந்தாள் என்னிடம்..!!
எழல்
அவளுக்கில்லை
ஏன் என்று
எனக்குத் தெரியவில்லை..!!
தழல்
கொண்டது அவள் மனம்
அதன்
அனல் சுட்டது என் மனதை..!!
சுழல்
கொண்டது பெருங் காதல்
அதன் உழல்
என்னை சூழ்ந்தது..!!
தொழல்
செய்தாள் என் காதலை
தவம்
கொண்டாள் தன்னுள்ளே..!!
குழல்
கொண்டது அவள் சோகம்
என் பதில்
கேட்டது அவள் பெரு வினா..!!