விட்டு விடு
உன்னை நினைத்து, உன்னை நினைத்து,
ஊமை ஆகிறேன், என்னை விடு...
கொஞ்சம் மிஞ்சும் உயிரை நானோ
காக்க தவிக்கிறேன், விட்டு விடு...
இதயகூட்டின் ஓசையை
துவண்டுப்போக செய்கிறேன்.
உன்னிடம், கேட்டு வாங்கினேன்
உனக்கென விட்டு செல்கிறேன்.
வாழ்வை மாற்றினாய்
எனை இன்று வானம் ஏற்றினாய்.
வலிகள் கூட்டினாய்
எனக்குள்ளே விஷத்தை ஊட்டினாய்
உன் மடிப்போல சொர்க்கம் இந்த
உலகில் எங்கும் இல்லை.
உன் கரம் இன்று தட்டிவிட
வேறு எங்கே செல்வேன்?
பாசமில்லா உலகை தேடி
நானும் பறக்கிறேன்.