காலத்தின் போக்கிலே ஞாலமா

கண்ணுக்கு அழகாய் கண்டாங்கி சேலையில்
கவிழ்ந்த தலையுடன் களைமிகு முகமுடனே
நாநயம் நிறைந்த நாணம் வழியும் நங்கைகள்
நாகரீக உலகில் இன்றும் கிராமத்து பறவைகள் !

விழிகளுக்கு விருந்தாய் விதிகளுக்கு மாறாய்
வீதிகளில் அன்னநடை ஆடையில் அரைகுறை
விரசத்திலோ உச்சம் விதத்திலோ மிச்சம் மீதி
நகரத்தில் உலவிடும் நவநாகரீக மங்கைகள் !

பழமையும் புதுமையும் கூட்டணி அமைக்குது
வளமையும் வறட்சியும் தனிதனி அணியாகுது !
பெண்மைக்கு இலக்கணம் இருபிரிவாய் ஆனது
பெண்களின் பெருமையும் மறந்தே போனது !

நவீனஉலகில் நடப்பவை யாவும் நாகரீகமா
நவீனத்துவ வளர்ச்சியின் அடையாளங்களா !
காலத்தின் போக்கிலே ஞாலமும் போகுதா
காலமாய் காத்திட்ட பண்பாடும் மறையுதா !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Feb-14, 8:56 am)
பார்வை : 401

மேலே