நிறைவேறாத ஆசைகள் என்ன செய்துகொண்டிருக்கும் - கஸல்
நிறைவேறாத
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?
உன் பேரழகை நீயே
வியந்து கொண்டு
வீட்டைவிட்டு வெளியேறுகிறாய்
முகத்திரை அணிந்துகொண்டு
நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்