உலகமயமாக்கலில் என் குடும்பம்
நான் விழித்திருக்கும்
தேசத்தில் நீயில்லை!
நீ உறங்கிக்கொண்டிருக்கும்
தேசத்தில் நானில்லை!
உலகமயமாக்கலும்,
உலகப்பொருளாதாரமும்
நமக்கு அமைத்து
கொடுத்ததெல்லாம்...
பூமிப்பந்தின் எதிரெதிர்
திசைகளில் வீசப்படவர்களாக
நானும், நீயும்
நம் குழந்தைகளும்.