என் முகநூல் நம் முகநூல்

கண்டங்கள் தாண்டி
கைகோர்க்கும் தளம்
ஆண்கள் பெண்ணாயும்
பெண்கள் ஆணாயும்
உருமாறி சாகசமாய்
உலா வருவதிங்கே
சாதாரண நிகழ்வுகள்
தன் முகம்காட்டி சிலர்
முகம் மறைத்து பலர்
ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கலென
நன்மையும் தீமையும்
சேர்ந்தே இருக்கிறது,,,

அகம் படிக்கும் இடம்
சிலரின் அகந்தையையும்
அன்பு பரிமாறும் இடம்
சிலரின் வம்புகளும்தான்
உண்மையாய் பல பொய்கள்
உலவுகின்ற இடம்
ஆறுதல் சொல்லவும்
ஏளனம் செய்யவும்
நம்பகமிக்கவரும்
ஏமாற்றுக்காரர்களும்
ஒன்றாய் சேர்ந்தே
கூடிவாழும் புதுஇடம்,,,,

தேசங்கள் கடந்து
தோழமை உறவுகளை
நேசகரங்கள் நீட்டி
பிணைக்கும் இணையம்
அறிமுகமில்லா நபரை
நட்புகளாய் அள்ளித்தரும்
இங்கு சண்டைகளும்
பின்பு சமாதானங்களும்
என்றும் அரங்கேறும்
நட்பாய் அறிமுகமாகி
உறவுகளாய் பரிணாமம்
உலகை ஒருகினைக்கும்
ஒற்றையடி பாதை,,,

முகநூளோடு நானும் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Feb-14, 9:18 pm)
பார்வை : 315

மேலே