வெளிநாடு போறவரே பதில் சொல்லுங்க

களனி காட்டுக்குள்ள கால் வைத்து!
உழுது உரமிட்டு பயிரிட்டு!
அதிகாலையில கண் விழித்து
செழிப்பா நீ வளரும்னு சிரத்தை கொண்டு
உழைக்கும் உளைப்பாளி பிள்ளைகளே!!

கதிர் முத்தி விளைஞ்சு நிக்கையில
வெளிநாடு போறேன்னு நீயும் சொல்ல
எங்கிருந்தாலும் பிள்ளை நல்லா வாழனும்னு
சோறு போட்டா பூமியை வித்துதான்
தந்தாங்க உன் பெற்றோர்!!

ஒரு நிமிசம் நின்னு நான் சொல்லுறத கேளுங்களே!!
வசதி தேடி வேருலகம் போறதுக்கு
விதை நெல் வித்து !விளைஞ்ச காட்ட வித்து!
அடமானமாய் உனை வைத்து எந்த பிடிமானாமும் இல்லா
வசதி வேண்டுமுன்னு வாசம் விட்டு போறவரே!!

சூரியனை எதிர்நோக்கி கதிர்களெல்லாம் காத்திருக்க!
பெத்தவனை ஒத்தையில விட்டு புட்டு
பந்தபாசம் விட்டு பிறந்த தேசம் விட்டு
பரதேசம் போவதேனப்பா!!
இக்கரைக்கு அக்கரை பச்சை!

எத்தனையோ பேரு சொல்லியும்
கேட்காம போறவரே!
வட்டிக்கு பணம் வாங்கி பற்றாக்குறைக்கு
உன்னையே அடமானம் வச்சு
தகுதி இருக்குதுன்னு தடம்மாறி போற நீ!

தென்றல் காற்றை வித்து உலர்ந்த காற்றுக்கேங்கி நீங்க
வாழ்வு செழிக்குமுன்னு பயிரை கருக்கி போட்டு போறீங்களே!
பெத்தவங்க சொன்னாலும் மயக்கும் பேச்சு கேட்டு
மதி மயங்கி போனாயே -முகந்தெரியா
முகவன் சொன்னததான் கேட்டீங்க!!

இரண்டு வருச வேலைக்கு மூணு இலட்சம் கட்டி
ஆகாயவிமானத்தில் ஆவியாய் பாருலகம் போறிங்க!
வெயிலில் நின்னா மேனி கருக்குமுனு
பொத்தி வளத்தாளே தாயவளும்
நீங்க போறதேசமேதுனு அறியாம!

பாவி மகன் பேச்சை கேட்டு மோசம் போயி!
ஒட்டகத்த மேய்கிறீங்க!!
தின்ற தட்டை கழுவாத நீங்க !சேக்குகிட்ட சிக்கிகிட்டு
முழி பிதுங்கி நிக்கிறீங்க !சோத்துக்கு வழியில்லாமல்
சொந்தமா சமைத்து மொத்த பாத்திரத்தை கழுவுவீங்க!!

கஷ்டகாலம் தீருமுன்னு ஆகாய கப்பலேறி போனீங்க!
வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கையை தான் தொலைப்பீங்க!!
வார்த்தையை நம்பி !அவமானமா நிப்பீங்க!!
கண்கலங்கி கதிரை நினைச்சு அழுவீங்க!
விம்மி விம்மி அழுதாலும் வீண்! வீண் தானே!!

மக்கபசி தீருமுன்னு மாற்றம் காண துடிச்சீங்க!
மாட்டிகிட்டு முழிப்பீங்க!!
தவமாய் தவமிருந்து தாய் உனை பெற்றாளே!
உன் கண்ணில் தூசிபட்டா கலங்கி தான் போவாளே!
கண்கலங்கி நீ அழுதா உயிரையே விடுவாளே!!

இருக்கும் வரை தெரியாத உறவுகளெல்லாம்
தூரதேசம் வந்ததும் உணர்த்துமப்பா!
ஓடோடி வந்திட நினைத்தாலும் கடலும் தடுக்குமப்பா!!
கொண்டு சென்ற பொருள் யாவும்
கடலில் காயம் கரைத்தது போல் ஆகுமப்பா!!

திக்கு தெரியா திசையிலே திக்குமுக்காடி நிக்கிறப்ப!
கள்ளகப்பலேறி கடல்தாண்டி நீ வந்தாலும்!
சொந்த ஊரைத்தேடி எந்த முகத்தோட நீ நிற்பாய்!
எண்ணி எண்ணியே உயிரெல்லாம் ரணமாகி!
உடம்பெல்லாம் புழுவாகி நெளியுமே!!

நூறுபேருக்கு சோறுபோட்ட உழைப்பாளி பிள்ளையப்பா!!
சோறு தண்ணிக்கு வழியில்லாம கோடியில நீ நிப்ப!
துடித்து துடித்து இதயமெல்லாம்
வெடிப்பது போல் இருக்குமப்பா!
மதிமங்கி மயங்குமப்பா!!

தவித்த வாய்க்கு தண்ணிதர ஒருத்தனுமே இல்லையப்பா!
பெற்றோரை தவிக்கவிட்ட பாவம் உனைசுற்றியே இருக்குதே!
ஏனப்பா இந்த வேதனையப்பா! யோசனையோட இருந்திருந்தால் கதிரறுத்து களம் கண்டு!
வயிறார உணவு உண்டு!வாழ்வாங்கு வாழ்ந்திருப்ப!!

சிந்தைகுழைந்து! சீர்குலைந்து குப்பையில நீ கிடக்க
தினம் தினம் உலகத்தில ஜடமாய் நீ கிடப்ப!
பெத்தவன் பேச்சு மறுத்து மத்தவன் பேச்சு கேட்டா
உலகத்திலுள்ள எல்லோருக்கும் பொருந்துமப்பா!!
எந்த ஊரு போனாலும் சொந்த ஊரப்போல வருமாப்பா?

எழுதியவர் : கனகரத்தினம் (25-Feb-14, 11:28 pm)
பார்வை : 242

மேலே