எதற்கு இந்த காதல்

உருகி உருகி காதல் செய்து
ஊர்சுற்றி திரிந்தது ஒருவரோடு,
நீ இல்லை என்றால் நான் இல்லை என்று
வசனங்கள் பேசி காலத்தை வீணாக்கி,
கடைசிவரை வாழ்வில் சேராமல்
வீட்டில் சொல்வோரை பணத்திற்காக
மணம் செய்யும் மனிதர்களே.....
உங்கள் மாசான உள்ளத்திற்கு
காதல் எதற்கு ? பேசி காலம் கடத்த
காதல் என்ற வார்த்தை எதற்கு?

எழுதியவர் : வேல்விழி (26-Feb-14, 2:16 pm)
பார்வை : 100

மேலே