விதியின் விளையாட்டு3

ரிஷானியை முதலில் பார்த்த பேராசிரியை உட்பட அனைவருமே மெய்சிலிர்த்துவிட்டார்கள்.

"எஸ், கெட்இன் " சொன்ன பேராசிரியை அவளுக்கான இடத்தில் அமர சொன்னார்!

முதல் வகுப்பு என்பதால் அனைவரும் எந்தவித சலனமுமின்றி அமைதியாக இருந்தார்கள், தெரியாத முகங்கள் புது மனிதர்கள் என ஒருவரையொருவர் பார்த்து விழித்துக்கொண்டிருந்தனர்.......


பேராசிரியை "ஒவ்வொரு மாணவர்களாக எழும்பி உங்களைப்பற்றி சொல்லுங்கள்" என்று கூறினார்.

சற்று தயக்கத்துடன் எப்படியோ அனைவரும் சொல்லி முடித்தனர்.

அனைத்து மாணவர்களும் ரிஷானியைதான் கவனத்தில் கொண்டனர்!

ஒருவழியாக முதல் வகுப்பு முடிந்தது, பக்கத்தில் இருந்தவர்களிடம் மட்டும் பேசிவிட்டு மற்றவர்களை பார்த்து புன்சிரிப்போடு
நிறுத்திக்கொண்டனர்.

முதல் நாள் கல்லூரி புது அனுபவமாக இருந்தது ரிஷானிக்கு,

அனைத்தையும் ரசித்தாள்!

மாணவர்கள் பலவண்ண உடைகளில் பட்டாம்பூச்சிகளாய் ஜொலித்தனர்.

மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் தங்களுடைய ஜூனியர்சை வரவேற்க தங்கள் துறை சார்பில் அடுத்தநாள் ஒரு எற்பாடுக்கு முடிவுக்கு செய்திருந்தனர்,,,,,,,,,,,

அன்று எளிமையாக எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் வகுப்புகள் சீக்கிரமாக முடிந்தது????

வீட்டிற்கு சென்ற ரிஷானி கல்லூரியில் நடந்த அனைத்தையும் 3 பேரையும் உட்காரவைத்து ரசித்து சொல்லிக்கொண்டிருந்தாள் புது அனுபவம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது அப்பா என்று சந்தோஷத்தில் சொன்னவள்.............அனால்......என்று இழுத்தாள்.......


ஆனால்! என்னம்மா ஏதாவது பிரச்சனையா என்று மகளை கேட்டார் தந்தை?

என்னுடைய வகுப்பை கண்டுபிடித்து செல்வதுதான் கஷ்டமாக இருக்கிறது என்று சிறு சங்கடத்தோடு சொன்னாள்!!!!!

இதானா?நானும் என்னமோ, எதோன்னு நினச்சிடேன் என்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்........

நாளை கல்லூரியில் function நமது சீனியர் மாணவர்கள் துறைத்தலைவர்கள் எல்லாரும் கலந்து கொள்வார்கள் என்று சொன்னார்களே?எப்படி இருக்குமோ?????


என்று மனதிற்குள் சற்று கலக்கத்துடன் இருந்தாள்!

இனிய இரவை அழகாய், முதல் நாள் கல்லூரி அனுபவத்துடன் முடித்தவள் காலை எழும்பி தனது கடமைகளை முடித்து விட்டு!

தன் அழகுக்கு மேலும் அழகு சேர்த்து அழகாய் ஜொலிஜொலித்தாள்!!!

தன் மகளின் அழகை பெற்றோரும் ரசித்து அனுப்பி வைத்தனர் தன் அழகு தேவதையை..........


அவள் கல்லூரிக்கு கிளம்பி விட்டாள், வரப்போகும் புது பிரச்சனை
"விதியின் விளையாட்டை" அவள் அறிவாளோ?


கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளை வரவேற்க
கல்லூரியின் chairman வேதியல் முதுகலை இரண்டாமாண்டு மாணவன் மதன் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறான்...............




தொடரும்.................

எழுதியவர் : ப்ரியா (26-Feb-14, 2:47 pm)
பார்வை : 285

மேலே