சாபம்-16

மனோகர், அசோக் இருவரும் அந்த இரவு அந்த முதியவர் வீட்டிலேயே தங்கினார்கள்

அந்த முதியவர் சொன்னதற்கு இணங்க அன்றிரவு இருவரும் தூங்காம இருக்க முடிவு செய்தனர்

அவ்விருவருக்கும் அந்த முதியவர் "கிராமத்து உணவாகிய" கம்பு சோறு மற்றும் காய்கறிகளை கொடுத்தார்

அசோக்கிற்கு இந்த உணவுகள் புதியதாக இருந்தது முதலில் அதை உண்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை இருந்தாலும் வேறு வழி இல்லை என்பதால் அதை உண்டான்

"ஆஹா !!!! superb அங்கிள்,,,, இந்த சாப்பாடு எப்பி இருக்குமோன்னு நெனச்சேன் பட் சூப்பர்"- புகழ்ந்து தள்ளிவிட்டான் அசோக்

"ஆமா அசோக் இப்போ இந்த மாதிரி சாப்பாடெல்லாம் வலை வீசி தேடினாலும் கிடைக்காது,,, இதுல ருசி மட்டும் இல்ல ஆரோக்கியமும் இருக்கு"- இவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் அதை அந்த முதியவர் வாசலின் பக்கம் இன்று கேட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டார்

பின் மெல்ல வீட்டின் பின் புறம் வந்தார்,,,, அந்த இருட்டு நேரத்தில் தீபம் போல நிலா ஒளிவிட அந்த வெளிச்சத்தில் அதை அழைத்தார்,,,,,,,,,,,


"கிருஷ்ணா!!! கிருஷ்ணா" - மெல்ல ரகசிய அழைப்பு அந்த அழைப்பிற்கு வந்து நின்றது அசோக்கை கொத்திய பாம்பு(விரட்டும்,,,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (26-Feb-14, 3:16 pm)
பார்வை : 400

மேலே