சாபம்-17
அந்த பாம்பை கண்டதும் இவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி அதன் அருகில் சென்றார் அதற்க்கு பால் வைத்தார்
"சபாஷ் டா!! சொன்ன வேலைய சரியா முடிச்சிட்ட"- அதற்க்கு பாராட்டு வழங்கினார்
அந்த பாம்பும் அதை உணர்ந்த வண்ணமாய் தன படத்தை தரை மீது கொத்தி தன மகிழ்ச்சியை வெளிபடுத்தியது
நள்ளிரவு இருவரும் விழித்திருந்தனர்,,,,,,,, ஆனால் அசோக்கிற்கு அது மிக கடினமாக இருந்தது பயண களைப்போ இல்லை விஷத்தின் வீரியமோ அவனை கண்களை மூட சொல்லி வற்புறுத்தியது அவன் துவண்டு விழுந்தான் ஆனாலும் சமாளித்தான் சில சமயங்களில் மனோகர் அவனை எழுப்பி விட வேண்டி இருந்தது அந்த அளவுக்கு கண் அயந்தார்
"அசோக்!! அசோக் தூங்கிடாதப்பா "
"இல்லை அங்கிள் எனக்கு ரொம்ப டையெர்டா இருக்கு "
"இன்னைக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோ அசோக் "
அவனக்கு பதிலைத்து கொண்டிருந்த நேரம் அவன் செவிகளில் விழுந்தது அந்த சத்தம்
"அங்கிள் என்ன சத்தம் அது??"
"எது அசோக்??"
"உங்களுக்கு கேக்கலையா??? அது ???"- திணறினான் அசோக்
மனோகரும் கூர்ந்து கேட்டார்,,,
"ஆமாம் அசோக்,,,,,,,,, யாரோ பாடுற மாதிரி"
"யாரு அங்கிள் இந்த நேரத்துல பாடுறது"
:"தெரிலையே "
"வாங்க பாக்கலாம் "- அவன் போலீஸ் மூளை அது யார் என்று பார்க்க சொல்லி வற்புறுத்தியது
மெல்ல எழுந்தான் இருவரும் வெளியில் சென்றனர் ,,, அங்கே கட்டிலில் அந்த முதியவர் படுத்திருந்தார்
அசோக் அவரை எழுப்பலாம் என்றான்,,, மனோகர் வேண்டாம் என்பது போல சைகை செய்தார்
மெல்ல வெளியே வந்து எந்த பக்கம் அந்த பாடல் ஒலி வருகிறது என்று இருவரும் கூர்ந்து கேட்டனர் அது வடக்கு பக்கத்திலிருந்து வந்தது
இருவரும் அந்த பக்கம் நோக்கி சென்றனர்
அந்த முதியவர் கண் திறந்தார்,,,,,,, அவர் உதட்டில் அதே மர்ம சிரிப்பு
"போ மனோ போ!!!! உனக்காக தான் அந்த பாட்டு இத்தன வருஷம் காத்திருந்தது இதுக்கு தானே "
(விரட்டும்,,,,,,,,,,,,,,,,)