வையீராகியம் - சிறு கதை

பேருந்து நிலையத்தினுள் உள்ள புத்தக சாலையில் புத்தகம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். அப்பொழுது, எதிரே ஒருவன் பேருந்தை நோக்கி ஓடி வந்தார்.அவ்வேளையில் எதிரே வந்தவர் என் கால்களை மிதிக்க , சட்டென்று நான் விலகினேன் .அதில் என் மிதியடிகள் அறுந்து விட்டன.....

"அவ்வேளையில் நான் செய்வதுஅரியாது திகைத்தேன் "

கால்களில் மிதியடிகள் இல்லாமல் எப்படி செல்வது !

நான் சுற்றி முற்றும் பார்த்தேன்.என் மிதியடிகள் சரி செய்யவே, சற்று தூரத்தில் ஒரு மின் கம்பத்தின் கீழே
மிதியடிகளை தைத்து கொடுப்பவர் அமர்ந்திருந்தார்.

அப்போது என் மனது பெரு மூச்சு விட்டு " எப்படியோ செருப்பு தக்கிரவன் இருக்காண்ட சாமி " என்று.

ஏன்னா! நம்மால வெறும் கால்ல நடக்க முடியாதுன்னு தான்.

அவர் அருகே சென்று அவரை பார்த்தேன். அங்கே அங்கே சிறியதாய் கிழிந்திருந்த சட்டையும்,எண்ணெய் கூட காட்டிராத தலைமுடியும்,அந்த வெயிலுக்கு ஏற்றவாறு முகமும் கறுத்திருந்தன ..

அவர் என்னை பார்த்து,"என்னங்க செருப்பு தைக்கணும சார்.ஒரு ஜோடிக்கு 30 ருபாய் "
என்றார்.

நானும் அதை கேட்டு கொண்டு பணம் கொடுக்கும் போது பார்த்துகொள்ளலாம் என பதில் பேசாமல் ஒப்புக் கொண்டேன்!

அப்பொழுது ஒரு முதியவர் அவர் அருகே வந்து அமர்ந்து பேச்சு கொடுத்தார். இவரும் வேலையை செய்து கொண்டே பேசலானார். அவர்கள் பேசுவதை என்னை மறந்து கவனிக்கலனென்.தன்னுடைய குடும்ப நிலைமையைப் பற்றி பேசி கொண்டிருந்தார்கள்.

அவர் பெரியவரிடம்,"எங்க அப்பன் அப்பயே சொன்னாக இப்படி உதாரிய திரியர,நீ எப்படி உருப்பட போற! பின்னால உனக்குன்னு குடும்பம் வரும்போது புரியும்னுடா ன்னு சொன்னாரு " எனச் சொல்லிக்கொண்டே , ஆனா பெருசு என் புள்ளைங்கள என் நிலைமைக்கு கொண்டு வர மாட்டன் .அவங்க நல்ல படிக்கச் வைக்க , நான் ஒரு வேல சாப்ட்டு இருந்துக்குவன்.

" என் வருமானமே ஒரு நாளைக்கு 80 ரூபால இருந்து 100 ரூபா வர தான் " என்றார்.

நானும் நல்ல உழைக்க தயார் தான்,நல்ல வருமானம் இதுல கெடைக்காது பெருசு என்று சொல்லிக் கொண்டே, அவரது வாயில் புகையிலையை மென்னுக் கொண்டும், துப்பிக் கொண்டும் இருந்தார்.அதை கண்டு சற்று எனக்கு கோபம் ,அவனிடம் கேட்க முற்பட்டேன்,

அதற்கு முன் அவனே கூறிவிட்டான்,மூட்டைச் சுமக்கிறவன் கூட தினமும் குடிகாரன்.ஆனா, என்னால அப்படி முடியாது.

அப்பறம் எதுக்கு இத போடறனு பாக்குறிய பெருசு, இந்த வேகாத வெயில வேல பாக்கறதுக்கு தான்.இந்த பயலுக
மரத்தலாம் வெட்டிபுற்றனுங்க,நிழல் கூட கெடைக்க மாட்டிக்குது.

" பெருசு உன்ன எங்க அப்பன நெனச்சு சொல்லறான்,எதவாது வேணும்னா என்கிட்டே வா,யார்டயும் காசு வாங்காத என்ன புரியுதா!!!!!

இதை கண் சிமிட்டமால் பார்த்து கொண்டு இருந்தேன் நான்!

அவன் மறுபடியும் பேசி கொண்டே வேலையை தொடர்ந்தான்.என்னோட "வையீராகியம்" என் புள்ளைங்கள
காப்பாத்துனுமே தவிர, அவங்க கனவை உடைக்கராத இருக்க
கூடாது.

நான் சற்று திகைத்து நின்று அவனை பார்த்து நின்றேன்.பின் மிதியடிகளை வங்கி போட்டு கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.அவனிடம் நான் பேரம் பேசாமல் அவன் கேட்ட தொகையை விட பத்து ருபாய் அதிகமாகவே கொடுத்தேன் .அவன் அதை வாங்கி கொண்டு நன்றி தெரிவித்தான்.என் மனதில் ஏனோ அவனொடைய வையீராகியத்துக்கு, என்னால முடிந்த தொகை என நினைத்து கொண்டேன்.

என்னுடைய வீட்டிற்கும் வந்தடைந்தேன்,பின் என்னுடைய வேலைகளை முடித்து கொண்டு ,பின்னர் வாங்கி வந்த புத்தகத்தை எடுத்து படிக்கச் சென்றேன் . பக்கங்கள் போக போக என் கவனம் முழுவதும் அந்த செருப்பு தைத்தவரின் நியாபகம் தான்.ஏனென்றால், நான் படித்த புத்தகம் அமெரிக்காவின் முன்னால் அதிபர் "திரு.ஆப்ரகாம் லிங்கன் " உடைய வாழ்க்கை வரலாறு.

அந்த புத்தகத்தில் அவர் செருப்பு தைப்பவ்ரின் மகன் என்றும், அவரும் அந்த தொழிலை செய்ததும்,பின் முயன்று ஊரே போற்றும் அளவு உயர்ந்ததும் என்னை பிரமிக்க வைத்தது !!!

நான் 10 ருபாய் சேர்த்து கொடுத்ததற்கு பெருமை பட்டேன் .ஆனால், அந்த தொழிலாளய்யின்' மொத்த வருமானமும்,தன் குழந்தைகளுக்காக செலவிட நினைத்த அவரை கண்டு நான் வெட்கப்பட்டேன்.

நானும் ஒரு எழுத்தாளன் , கை நெறைய சம்பளம் வாங்கும் நான் என் தேவைக்கு போக ஏன் அந்த பிள்ளைகளுக்கு வழிக்கட்டுதலாகவும்,உதவிகரமாகவும் இருக்க கூடாது ஏன் நினைத்து சட்டையை மாற்றி கொண்டு உடனே அவரை பார்க்க புறப்பட்டேன் !!!!!

(நீதி: "வையீராகியம்" ஒரு விலை மதிக்க முடியாத "வைரம்")

எழுதியவர் : திரு.தினேஷ் குமார் (26-Feb-14, 4:09 pm)
சேர்த்தது : தினேஷ் .க
பார்வை : 256

மேலே