சுயம்வரம்

புதிதாக சொல்வதற்கு
ஒன்றும் இல்லை புரியாத
வார்த்தைகளை
நான் கேட்பதில்லை...

தெரியாத முகவரிகை
பார்ப்பதில்லை நான் பழகாத
உறவுகளை
மதிப்பதில்லை...

சுகமாக வாழ்வதற்கு
நினைத்ததில்லை
நான் சுமையாக யாரிடமும்
இருப்பதில்லை...

தயங்காமல்
என்றுமே வாழ்ந்ததில்லை
நான் தனியாக இருந்திட
நினைத்ததில்லை...

உயிராக துடித்திட
வருந்தவில்லை நான் உடலாக
இருந்திட
மறுத்ததில்லை...

சிலகாலம் தங்கிட உலகில்
இல்லை நான் பலகாலம்
நிலைத்திட
முயன்றதில்லை...

பின்பு எதற்கு இத்தனை
போராட்டம் பிறகு எதற்கு
இத்தனை
தேரோட்டம்...

நடந்தவைகள்
நடந்தவைகளே கடந்தவைகள்
கடந்தவைகளே..

எழுதியவர் : லெத்தீப் (26-Feb-14, 6:06 pm)
Tanglish : suyamvaram
பார்வை : 106

மேலே