மரணமே எப்போது மரித்துப் போவாய் - மணியன்

மரணமே
நீ எப்போது மரித்துப் போவாய் ?,
*******

மாற்றங்கள்
காணும் உலகில்
நீ மட்டும்
மாறாமல் உறைந்திருக்கிறாய். . .
*******

புசித்திடச் சோறு வேண்டி
பசித்திடும் ஏழையை
ரசித்து உன்
பசி அடைக்கிறாய். . . . .
*******

பிஞ்சுகளிடையேயும்
நஞ்சு போல்
நடை பழகி
நாடி நிறுத்துகிறாய். . . . .
*******

காதலால் பிறந்து
காதலால் வளர்ந்து
காதலில் மலரும்
காதலர் சிலரையும்
காவு கொள்கிறாய். . . .
*******

முதுமையின் தனிமையில்
முடிவுரை வேண்டிடும்
முடியாதவர் கதையையும்
முடித்து மகிழ்கிறாய். . . . . .
*******

உழைப்பால் உயரும்
உடையவர் பிரித்து
உமையவள் சிலரையும்
உருக வைக்கிறாய். . . . .
*******

வீடும் தான் ஓங்க
நாட்டுக்காய் தினமும்
மேட்டினில் காத்து நிற்கும்
மேன்மை மிகு வீரனின்
மேனியையும் தின்று தீர்க்கிறாய். . . . .
*******

தோராயமாக வேனும்
தேவையை நீ கூறு
ஆகாயம் அளவு
அள்ளி ஏன் கொள்கிறாய். . . . .
*******

நல்லவர் சிலரை மட்டும்
நாடாமல் விட்டு விடு. . .
நலிந்தவர் சிறந்து
நலமுடன் வாழ வேண்டி. . . . . . .


*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (26-Feb-14, 5:13 pm)
பார்வை : 145

மேலே