வேஷமிடத் தெரியவில்லை
அலைபாயும் மனசடக்கி
ஆளவும் தெரியவில்லை-
மனம் போகும் போக்கெல்லாம்
போகவும் முடியவில்லை!
கனமான இதயத்தை
சுமக்கவும் முடியவில்லை-
இதயமே இல்லாமல்
இருக்கவும் முடியவில்லை!
வண்ணத்துப் பூச்சியைப் போல்
வட்டமிடத் தெரியவில்லை-
வண்ணங்கள் புனையாமல்
வாழவும் தெரியவில்லை!
இலக்கணப் பிழையின்றி
எழுதவும் தெரியவில்லை-
கவிதையே எழுதாமல்
இருக்கவும் முடியவில்லை!
கனவுகள் நெஞ்சிலேந்திக்
களிக்கவும் தெரியவில்லை-
விழிகளே இல்லாமல்
வாழவும் முடியவில்லை!