கிளைமாக்ஸ் சண்டை

(தியேட்டரில் படம் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருக்கிறது........)

(நம்மாளு பக்கத்தில் ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என, சிறிது சிறிதாக குடிப்பதை பார்த்து, எரிச்சலடைந்த நம்மாளு பாட்டியிடமிருந்து குளிர்பானத்தை பிடுங்கி, மடக்...மடக்.. என ஒரே மூச்சில் குடித்துவிட்டு....)

நம்மாளு : பாட்டி கூல்டிரிங்க்சுன்னா இப்படி குடிக்கணும்...தெரியுதுங்களா....


பாட்டி : அடப்பாவி மவனே....அவசரப்பட்டியேடா....


நம்மாளு : ஏன்? என்ன..?


பாட்டி : அதுலதான் நான் வெத்தலைய துப்பிகிட்டு இருந்தேன்.....


(கேட்டவுடன் நம்மாளு வயிற்றுக்கும், வாய்க்கும் ஒரு கிளைமாக்ஸ் சண்டை நடந்துகொண்டிருந்தது........)

எழுதியவர் : உமர்ஷெரிப் (26-Feb-14, 10:00 pm)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே