முரண்கள் - கே-எஸ்-கலை

ஈக்கள் மொய்க்கின்றன
சிரித்துக் கொண்டிருக்கிறது
பூச்செடி !
==
பழைய வீணை
தேநீர் தயார் செய்தது
விறகுவெட்டி வீட்டில் !
==
தவறுதலாய் வந்தது
தவறாமல் வருகிறது
கள்ளுமரதிற்கு குரங்கு !
==
எலி மருந்து
திருடி தின்றிருந்தது
செத்த எலி !
==
பூக்கடைக்கு வந்தான்
பூச்சரம் வாங்கினான்
சாக்கடைக்கு போகிறான் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Feb-14, 9:28 am)
பார்வை : 245

மேலே