திசை மாறிய பயணங்கள்001

சமீர்....அவனின் கையை பிடித்து யாரோ ஒரு வாளி நிறைய நீரை எடுத்து அவன் அப்பாவின் தலை மேல் ஊற்ற செய்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவின் தலை மேல் எதற்க்கு நீர் ஊற்றுகிரார்களோ என்ற திகைப்புடன் நிற்கிறான் சமீர் .. ஆம் அவன் அப்பா மீண்டும் எழ முடியாத ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டார் என்பது பாவம் அந்த நான்கு வயது சமீருக்கு புரியவில்லை.
வீட்டுக்கு பல்லாயிரம் பேர் வந்து போகின்றார்கள். அவன் அப்பாவை தூக்கி ஒரு பெட்டியில் வைத்து சித்தப்பாக்களும் உறவினர்களும் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு புறப்படும் போது வீட்டில் அழுகைகளும் ஓலங்களும் அதிகரிக்கின்றன.
இவை அனைத்தையும் திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்த சமீர் ஓடோடி தாயிடம் போகிறான். அவனது தாயோ பிறந்து 21 நாட்களேயான அவனது தம்பியை மடியில் வைத்த வண்ணம் கட்டிலில் உட்கார்ந்தபடி கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறாள். மூன்றே வயதான அவனது தங்கையும் தாயினருகே உட்கார்து தம்பியுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறாள்...........(தொடரும்)