அறியப்படாதவன் முட்டாள் -பூவிதழ்

நடப்பவையெல்லாம்
நல்லவைக்கே என்றால்
நல்லநேரம் எதற்கு ?
இராகுகாலம் எதற்கு ?
எல்லாம் விதிப்படிஎன்றால்
வஷ்துப்படி வாசற்படி எதற்கு?
எல்லாம் அவன்செயல் என்றால்
ராசிகற்கள் எதற்கு ?
நவக்கிரகம் எதற்கு ?
இப்படி ஏன் எதற்கு
என கேட்பவன் அறிவாளியா ?
இல்லை முட்டாளா ?
எல்லாக்கேள்வியும்
நீ அறியப்படாதவரை
மட்டுமே அறியாமையாய் !
உன்னை பிறர் அறியாதவரை
பிறரை நீ அறியாதவரை
இருவரும் முட்டாளே
அவரவர் அறிவுக்கு !
ஏதோ ஒரு முட்டாளின்
ஏன் ? எதற்கு ? என்ற கேள்விதான்
இன்றைய அனைத்து
கண்டுபிடிப்புகளின் தாய் !
இப்போது அறியமுடிகிறதா ?
அறிவியலை ! அறிவின் இயலை !