துளித்துளியாய்--01

எங்கிருந்தோ அழைக்கிறாள்
ஏன் ஒளிந்தே செல்கிறாள்
மின்னல்!

புன்னகைத்தாள்
பூப்பொழிந்தாள்
மழை!

தொட்டான் நடுங்கினாள்
தொடர்முத்தம் கொடுத்தான்
வண்டும் மலரும்!

பெற்றதில் நிறைந்தாள்
பிரிந்ததை மறந்தாள்
சூலுற்ற மலர்!

வருத்தம் பெருத்தது
வடிவம் திரிந்தது
வாழ்க்கை கனிந்தது!
== ++==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (28-Feb-14, 3:55 pm)
பார்வை : 111

மேலே