ஏ உசுர புடிங்கி போறபுள்ள - பூவிதழ்

ஏ உசுர புடிங்கி போறபுள்ள
ஒத்தவார்த்த சொல்லவில்ல
உன் சொத்து பத்து ஏதுவேனா
ஒத்தசொல்லு போதும்புள்ள



இனி
சொன்னாலும் ஒருவார்த்த

சுள்ளி முளைச்சிடுமா
சுட்டமண்ணு கரஞ்சிடுமா-
சொல்லுபுள்ள
சித்திரையில் பனிவிழுமா
சுனைநீரும் கசந்திடுமா

குருவி கூடுகட்டி
கோபுரந்தான் சாஞ்சிடுமா
தேனீ கூடுகட்ட
தேக்குமரம் முறிஞ்சுடுமா

உழுது உயிர்வாழ
உசிரான நீயுமில்ல
அழுது அகம்வாழ
ஆதரவாய் நீயுமில்ல
பொழச்சு புறம் வாழ
புடிச்ச பொருளுமில்ல

உழுது பயிர்செய்ய
ஒருசொட்டு நீருமில்ல
ஊரே அழுகுதிப்போ
உன்கண்ணில் நீரேப்போ

நா
உருண்டு பேரண்டழுத கண்ணீர
ஒத்தையில திருப்பிவிட்டா
உப்பாறும் நெறஞ்சு போகும்
ஒருபோகம் வேளஞ்சுபோகும்

நா
பாடையில போறபோதும்
பார்த்து பதிலேதும் சொல்லலியே
பதிலோன்னு சொல்லிபுட்டா
பாதியிலஎறங்கி வந்திடுவேன்

செத்தும் சுடுகாடு போகாம
சுத்தி திரியிறேனே என்னபுள்ள
ஒருசொல்ல கேட்டுப்புட்டா
சொர்க்கம்தான் போயிடுவேன்

ஒத்த சொல்லு சொல்லுபுள்ள
உசிரோட வந்தாலும் வந்திடுவேன்
ஒருவேள சாமத்துல ...

எழுதியவர் : பூவிதழ் (28-Feb-14, 4:57 pm)
பார்வை : 195

மேலே