சைவம்
சைவம்தாவரம் சைவம்தாம் வரம்
சைவமே தரம் சைவமே உரம்
சைவமே நலம் சைவமே பலம்
சைவமே ருசி சைவமே புசி
சைவமே புசி சைவராய் வசி
சைவராய் வசி வையமே தொழும்
சைவமே தவம் சைவமே சிவம்
காய் கனி பறித்தால் செடிகொடி சாகாது
கழுத்தை முறித்தால் ஆடோ பிழைக்காது
வாய்குடல் இரைப்பை செடிகளில் கிடையாது
வம்ச விருத்திக்கு அலையவும் அலையாது
உயிரை வளர்க்க உயிரை கொல்லாதே
உடலை வளர்க்க உடலை தின்னாதே
உயிரில் லாத உடலும் புண் தானே
உயிரில் லாத உடலை தின்பாயோ?
கொன்றால் பாவம் தின்றால் தீராது
கொன்ற பாவம் என்றும் போகாது
உன்குடல் என்ன விலங்கின் இடுகாடா?
உணர்வுகள் எல்லாம் உணவின் பதிவேடாம்
விலங்கைப் போல விலங்கைத் தின்னாதே
விலங்கைத் தின்னும் விலங்கை தின்பாயா?
மலத்தைத் தேடி தேனீ போகாதே
மாமிசம் தின்பது மாமிசம் ஆகாதே!
இறைச்சீ என்ற இறைச்சியை தின்னாதே
இரையாய் எந்த உயிரையும் கொல்லாதே
இறைச்சி தின்றால் உடலில் கொழுப்பேறும்
இரத்தக் கொதிப்பால் இதயம் அடைப்பாகும்

