காயங்களை

நீ தந்த காயங்களை நீயே மாற்றி விட்டு - இப்போ
சாட்சிகளின்றி என் உயிரையே பறித்து விட்டாயே!
உன் நலனின் என் உயிர் வைத்து உனை காக்க - என்
உயிரையே நீ கேட்பாயென நான் அறிவேனோ !
உன் ஆசைகள் என் ஆசையென நிறைவேற்ற - உனக்கு
என்னொருவன் மேல் ஆசையை நான் அறிவேனோ!
நீ பேசிய வார்த்தைகள் இன்று - என்
காதில் இடியாகவே ஒலிக்கின்றது தாங்குமோ என் தோழி!
என் கதை கேட்ட கற் சுவர் கூட கண்ணீர் வடிக்கின்றது
உன்னால் மட்டுமே முகம் மலர்ந்து சிரிக்க முடிகின்றது