கோபம் வந்தால் என்ன செய்வார் - மணியன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கருத்துக் கணிப்புக்காக கோபம் வந்து விட்டால் உங்கள் கணவர் எப்படி நடந்து கொள்வார் என்று நான் சில பெண்களிடம்
கேட்ட கேள்விக்கு அவரவர் மனைவிகள் சொன்ன பதிலைப் பாருங்கள்.
==== ==== ==== ====
அரசியல் வாதி :- சும்மா வாங்கு வாங்குன்னு
வாங்கி விடுவார்.
டெய்லர் :- தை தைன்னு குதிப்பார்.
சலவைத்தொழிலாளி :- வெளு வெளுன்னு
என்னை வெளுத்துடுவார்.
பால்காரர் :- கர கரன்னு கையைப் பிடிச்சு
இழுத்து எறிஞ்சுடுவார்.
டிரைவர் :- மிதி மிதின்னு காலாலேயே
மிதிப்பார்.
கிரிக்கெட்டர் :- அடியோ அடின்னு அடிப்பார்.
ஃபுட்பாலர் :- உதை உதைன்னு உதைப்பார்
பேங்க் கேசியர் :- எண்ணி விடுவார் எலும்பை.
எழுத்தாளர் :- அவர் எழுதிய கதையை
படிக்கச் சொல்வார்.
என் மனைவி :- எவ்வளவு தைரியம்
இருந்தால் எல்லோரிடமும்
கேட்டு விட்டு கடைசியாக
என்னிடம் கேட்பீங்க.
இத்தனையும் நான்
செய்வேன்னு. மறந்து
போச்சா.வீட்டுக்கு வா. . .
உனக்கு இருக்கு. . . .
எனக்கு வீட்டில் அலுவல்கள் இருப்பதால்
பேட்டியை இத்துடன் முடித்துக் கொண்டு
விடை பெறுகிறேன். நன்றி. அய்யோ.வணக்கம்.