ரகசியமானவளே

அவள்.................!
உலக அதிசயம் அல்ல
உலக ரகசியம்
அவள்..........!
விரல் அசைவில்
வானிலை மாற்றம் நிகழ்த்தும்
முதற்கோள்.....
அவள்.......!
இமைகளில் உயிர் தாங்கும்
உன்னத ஆத்மா
அவள்........!
அன்பால் சூழப்பட்ட
தீபகற்பம்
அவள்.........!
பனிப்பிரதேசத்தின்
சிம்னி விளக்கு
அவள்..........!
திராவகம் சுமக்கும்
தேவாமிர்தம்
அவள்...........!
அட்ச ரேகைகளும்
தீர்க்க ரேகைகளும்
இவளின்......
பூமத்திய ரேகை
நோக்கியே.........!
ஆம் அவள் உலகின்
அதிசயம் அல்ல......
"ரகசியமானவள்.......................!"
காதோர முடி ஒதுக்கி
கருமயிர் தனை வாரி
வகிடெடுத்து
ஆடவர் நடைபயில
பூச்சூடியவள் அவளே...................!
பிறை நெற்றி நந்தவனத்தில்
பொட்டு வைத்து ஒளிர்ந்தவளும்
அவளே.......!
கன்னக்குழிகளில் இதயங்கள்
புதைத்து
களங்கமில்லாது சிர்ப்பவள்
அவளே.......!
விழிவழியே வரவேற்று
உயிர் வழியே ஊடுருவி
இதயக்கதவுகளை
திறந்தவள்
அவளே.........!
விழியோரம் மையிட்டு
வழியோரம் காத்திருந்தவளும்
அவளே....................!
கவிதை மடல்களில்(காது)
புது தங்கம் அணிந்து
காதல் மடல்கள்
எழுத வைத்தவளும்
அவளே...........!
செவ்விதழ் மலர்ந்து
உருகு நிலைக்கும்
உறை நிலைக்கும்
வேதி மாற்றங்கள் நிகழ்த்தியவள்
அவளே............!
வளைவு நெழிவுகளில்
வாசகங்கள் அமைத்தவள்
அவளே.........!
ஒரு நூறாயிரம்
கவிஞர்களின்
கவிதைகள்
அவளே.........!
கோடிக்கண்களின்
கனவுகளில்
அவளே.............!
மொத்த உலகின்
ஒற்றை நினைவு
அவளே........!
மணற் பிரதேசங்கள்
மலைச்சாரல்கள்
மின்னற் கீற்றுகள்
பாறைக்குழம்புகள்
அவள் அங்கங்கள்...............!
ஆம் மொத்தத்தில்
ரகசியமானவள்
அவள்.............
"என்னவள்..........!"