===+++உடைந்துபோன நிலாச்சில்லுகள்+++===

வில்லும் அம்பும்
ராம அர்ச்சுனனுக்கு
==அவளுக்கு கூர்விழி.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

காண்பதற்கு அழகு
கரடுமுரடான தூரத்து கிரகம்
==ஜன்னல் சிறையில் நிலவு.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

நீண்டிருக்கும் நைல்நதி
கறுத்திருக்கும் கார்மேகம்
==காதலிக் கூந்தல்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

விடியாத உலகம்
வியாக்கியானத் தவளைகள்
==பாசிபடிந்த பழைய கிணறு.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

வைகறை பொழுது
வாகை மரத்தடி
==உடைந்துபோன நிலாச்சில்லுகள்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Mar-14, 4:37 pm)
பார்வை : 178

மேலே