மரணத்திற்கு தயாரா--அஹமது அலி--

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
கடந்து வரும் ஒவ்வொரு நொடியும்
எதை நோக்கி.....
மரணத்தை நோக்கியே.!
/0/
பிறந்தது வாழ்வதற்கென்றால்
வாழ்வது மரணிப்பதற்கே!
வாழ்ந்து கொண்டேயிருப்பதற்கு
வாய்ப்பில்லை-ஆனால்
வாழ்ந்து மரணிக்க
வாய்ப்புண்டு!
/0/
எத்தனை பேர் வாழத் தயார்.?
எத்தனை பேர் மரணிக்கத் தயார்.?

அற்ப வாழ்க்கைக்கு
என்னென்ன தயார் நிலைகள்
அற்ப வாழ்க்கைக்குப் பின்
முடிவிலா வாழ்க்கைக்கு
யாரிங்கு தயார் நிலையில்.?
/0/
உறுதியற்ற வாழ்க்கைக்கு
எத்தனை ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள்!
உறுதியான மரணத்திற்கு
ஏன் அச்சத் தயக்கங்கள்.!
/0/
நன்மை தீமை கணக்கை
சரி பார்த்து நன்மை மிகுதியில்
நம்பிக்கை கொண்டவர் யாரிங்கே?
நல்ல மனிதராய் வாழ்ந்த
திருப்தி கொண்டவர் யாரிங்கே?
/0/
உதவி சிறியதாயினும்
நன்றி கூறுதல் பண்பென்கிறாய்
உன்னையே படைத்தவனுக்கு
நன்றி கூற ஏன் ம(று)றக்கிறாய்.?
/0/
கண்களில் ஒளியுணர்வும்
காதுகளில் ஒலியுணர்வும்
தேகத்தில் தொடுவுணர்வும்
மூளையில் அறிவுணர்வும் தந்த
படைப்புகளின் படைப்பாளனை
போற்ற ஏன் ம(று)றக்கிறாய்?
/0/
அவன் தந்த கொடைகளுக்கெல்லாம்
நன்றி கூறி முடிந்திடுமா?அதற்காக
நன்றி கூறாமல் இருந்திட ஆகுமா?
/0/
எண்ணிப் பார்ப்பவரின்
எண்ணிக்கையும் உயிரும்
அவன் வசம்!
எண்ணிப் பார்க்காதவரின்
எண்ணிக்கையும் உயிரும்
அவன் வசமே!
/0/
எண்ணிப் பார்த்தவர்
மறுமையில் மோச்சம் அடைவர்
எண்ணிப் பாராதவர்
மறுமையில் கைசேதம் கொள்வர்!
/0/
மறுமையில் நம்பிக்கை
இல்லையென்போரே...
ஒருமுறை உன்னை படைத்தவனுக்கு
மறுமுறை படைக்க
முடியாத காரியமா?
/0/
பகுத்தறிவு ஈந்தது
படைத்தவனை நீயுணர
பகுத்தறிவைக் கொண்டு
படைத்தவனை இகழ அல்ல..!
/0/
மறு நொடிக்கு
உன்னால் உத்திரவாதம்
கொடுக்க முடியுமென்றால்..
இன்னும் இகழ்வாய்
ஒவ்வொரு நொடியும்
அவன் தயவென்றால் புகழ்வாய்!
/0/

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (3-Mar-14, 7:44 am)
பார்வை : 225

மேலே