தெரிந்து மறுக்கிறாயோ
மீண்டும் மீண்டும் ஏன்
மறுக்கிறாய் -காதலில்
மறுப்புக்கும் ஒரு
எல்லை உண்டு ....!!!
நீ மறுக்கிறாயே தவிர
வெறுக்கிறாய் இல்லை
நீ வெறுத்தால் நான்
மறுத்துக்கொண்டே
இருப்பேன் ....!!!
உன்னை
வெறுக்க மாட்டேன் ...!!!
நான் காதலை மறுக்கவும்
மாட்டேன் என்று தெரிந்து
மறுக்கிறாயோ ....???