ஈரமற்ற மணல்

பொன்னிறத்தில் மின்னுகின்ற
பூக்களொத்த
இலைகள்
தாய்மடியில் முத்தமிட
தவிக்கும்
மரக்கிளைகள்
வானழகில் மையல்கொண்டு
ஒளிபதிவிடும்
நீர்நிலைகள்
பாலைவன தேசத்து
தங்கமணல்
துகள்கள்
இதுபோல்
ஓரிறைவன் படைப்பினிலே
எத்தனையோ
வகைகள்
ஒற்றுமையாய்
தன்கடமை
உள்ளுணர்ந்து செய்ய,
வீண்பெருமை பேசுகின்ற
மானிடத்தில் மட்டும்,
ஏன்
இறையை மறுக்கின்ற
கோரநிலை உளதோ?