பழச நினச்சு பாருங்க

ஓரணா,ரெண்டணா,
அரக்காணி,முக்காணி,
பஞ்சுமிட்டாய்,வருக்கிரொட்டி
புள்ளைபந்து,கோலிகுண்டு
சிம்னி விளக்கு,அருவாமனை
எருவரட்டி,விறகு அடுப்பு
கம்பங்கூழ்,கேப்பைக்களி
ஒனிடா, சாலிடர்,
ஒலியும் ஒளியும்,
வயலும் வாழ்வும்
சென்னை தொலைக்காட்சி
தடங்கலுக்கு வருந்துகிறோம்
டொரினோ,ஓமத்தண்ணி,
கோலி சோடா,இஞ்சி மரப்பான்
கைத்தறி, கண்டாங்கி
மும்மாரி மழை,முப்போக விளைச்சல்
மண்தரை வகுப்பறை
கடிதாசி, தந்தி
ஆலமரம்,சோலைவனம்
இலங்கை வானொலி கூட்டுஸ்தாபனம்
வெண்ணிறப் பற்களுக்கு கோபால் பல்பொடி,
வாசிங்பவுடர் நிர்மா, ரீகல் சொட்டு நீலம்

இதுபோல இன்னும் இருக்குதுங்க
நெறயவே காலத்தால கடத்திச்
செல்லப்பட்ட சங்கதிகள்
செத்துவிட்ட கீதங்கள்

ஒண்ணு ரெண்டு தப்பிச்சு
உசுரோட இருக்கலாம்
கண்ணுக்குள்ள அப்பப்போ
வந்துவிட்டு போகலாம்
பழங்கால சங்கதிகள்
பசுமையான நிம்மதிகள்

நாங்களுந்தான் வாழ்ந்திருந்தோம்
நிம்மதியாய் நாட்டுக்குள்ளே

நாகரீகம் வந்திடிச்சு
எதிரிகளாய் வீட்டுக்குள்ளே
அப்பனுக்கு பிள்ளை
கணவனுக்கு மனைவி
எதிரெதிரே நடைபிணமாய்

எங்க போயி சொல்ல
எத வச்சு கொல்ல.....!
நாகரீகப் பேய
வேரோடு கிள்ள...

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-14, 12:04 pm)
பார்வை : 398

மேலே