தீப்பெட்டி ராட்சசி பாகம் 6
ஐயோ என்ன சொல்லப் போகிறானோ என்று கடந்து மனம் தவியாய் தவித்தது. அவன் என்ன சொன்னால் எனக்கு என்ன வந்தது ? நான் ஏன் பதற்றப்படப் வேண்டும் ? என் மனம் ஏன் இப்படி பாடாய் பட வேண்டும் ? தீஜே எனக்கு அவ்வளவு முக்கியமானவனா அல்லது என் மனதுக்கு நெருங்கியவனா ? ஏன் இத்தனை குழப்பம்... ஈஸ்வரா.... காப்பற்றேன்.... மனதில் உக்குரலில் ஒரு தனிபட்ட நெருடலான கோரிக்கையை அந்த பரமசிவனிடம் போட்டு வைத்தாள். அவன் காதில் இதுவெல்லாம் விழுந்ததோ என்னமோ தெரியவில்லை.
மெல்லமாய் வாய்த் திறந்த தீஜே புன்முறுவலோடு சொன்னான் ''உன்னை நான் மட்டும் தானடி பார்க்கணும். வேற எவனாச்சம் பார்த்தாலும் கொல்லனும். அடி நீதானே என்னோடு பொண்டாட்டி. உன்ன லவ் பண்ண என்கூட எவன் போட்டி ??
கண்கள் விரிய அவனைப் பார்த்த மிதர்ச்சலாவிற்கு உண்மையிலேயே இப்போதுதான் தலை சுற்றியது. தீஜே அவனது புருவங்களை தூக்கி என்ன என்பதைப் போல கேட்டான். மிதர்ச்சலாவின் எண்ணமெல்லாம் ஒரே சிந்தையில் தான் இருந்தது ராம ஏன் மனத்திரையில் சற்று முன் நான் கண்ட காட்சிகள் ஏதும் நனவாய் ஆகிவிடக் கூடாது.
கனவு அதுவும் கண்களை கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு நின்றவாறே யோசித்த கனவு எதுவும் நடந்து விடக் கூடாது என்று நினைத்தாலே ஒளியே அவளால் அதனை நிறைவெற்றாமல் இருக்க முடியவில்லை.
மயங்கி அவன் மீதே சரிந்தாள். தீஜேவின் கண்கள் ஆம் அவளுக்கே உரிய அந்தக் குறும்புக் கண்கள் அவள் எதிர்பார்த்ததை போலவே அவளை கிறங்கடித்து விட்டது. கிறக்கத்தில் மயங்கி சரிந்தவளை கைத் தாங்கலாய் பிடிதிருந்தவனும் சும்மா சொல்லக் கூடாது அவளை உண்மையிலே அன்றுதான் நன்றாக ரசித்தான்.
அவளது குண்டு கண்கள். ஆப்பிள் கன்னங்கள். வில் புருவங்கள் என்று தனித் தனியாய் வர்ணிக்க விருப்பம் இல்லை. அதற்கு அவள் அவ்வளவு அழகும் இல்லை எனலாம். ஏதோ பார்த்தால் மட்டும் மீண்டும் இன்னோர் முறை அவளை பார்க்க வேண்டும் என ஆர்வத்தை தூண்டும் ஒருவித கலகலப்பான முகம்.
தீஜே கவிதை வரிகள் பொழிந்தான். மிதர்ச்சலா மயங்கி சரிந்தாள். இதுதான் அவளது எண்ணத்தில் பதிந்த இறுதி விஷயம்.கண்கள் திறந்தப் போது குட்டி சோப்பாவில் பொம்மைகள் பதித்த போர்வையில் சுரிண்டிருந்தால். எழுந்து அமர்ந்தாள். எதிரே தீஜே.
கையில் சூடான காப்பி போல ஆவி பறந்தது. 'நெஸ்காப்பி' குடிக்கிறான் என்பதனை அதன் வாசத்தை வைத்தே மிகத் துல்லிதமாக கண்டுப்பிடித்து விட்டாள் காரணம் அவளும் ஒரு காப்பி பிரியைத் தான். தீஜேவின் குறும்புக்கண்கள் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தது.
உன்னை விட அழகிகள் இல்ல... இருந்தாலும் நீதான் அழகு...
தள்ளி நின்னு ரசிக்கிறேன் உன்னை பக்கம் வர பயமா இருக்கு....
சிரித்தவாறே பாடினான் தீஜே. காப்பியையும் முழுதாய் பருகிவிட்டான் போல அதை அருகிலிருந்த மேஜையில் வைத்தான். மிதர்ச்சலா அமைதியாகக் காணப்பட்டாள்.
தீஜே அவளிடம் கேட்டான் நக்கலாக இங்கையே செட்டல் ஆகிடலாம்னு முடிவு பண்ணியாச்சோ... ??
கேள்வியை அவன் முடிப்பதற்குள் விருட்டென எழுந்தாள் மிதர்ச்சலா.
மிடுக்காக முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள் அவனை பார்க்காதவாறு. அவனோ எங்க கிளம்பியாச்சா ? அப்பறம் பயணம் எங்க ? அடுத்து மிட்வெலியா இல்லே பெவிளியன்னா இன்னோர் தடவை மயக்கம் போட ? சிரிக்காமல் எப்படித்தான் அவனால் இப்படி கிண்டலடிக்க முடிகிறதோ புரியாமல் தவித்தாள் பேதை.
அவளது மனத்திரையோ வழக்கமான வேலையை ஆரம்பித்து விட்டது. அவன் அவளை கலாய்த்துக் கொண்டிருப்பது விளங்காமல் அவளது மானங்கெட்ட மனமோ அவனோடு மடியில் அமர்ந்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்று இவள் எண்ணி எண்ணி அவனது தலையில் கொட்டுவதைப் போலல்லவா காட்சிகளை படமாக்கி கண்முன் ஓட விட்டு கொண்டி இருக்கிறது.
இதற்கு மேல் இங்கு நின்றாள் இவன் நிச்சயமாய் நம்மை நன்றாக கலாய்த்து விடுவான் அதற்கு வலி விடுவானேன் என்றெண்ணி வாசக்கதவை தேடினாள் அவ்வீட்டை விட்டு வெளியேற.
என்ன திரு திருனு முளிப்பேனு பார்த்தா... நீ திரும்பி திரும்பி முழிக்கற... ? என்ன வாஷ் ரூம் தேடரியா என்றான்.
பத்திக்கும் தீப்பெட்டி !

