தீப்பெட்டி ராட்சசி பாகம் 5
ஆனால், அவளது இம்மாற்றம் அவளுக்கு மட்டுமின்றி அவளை சுற்றி இருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதலால், அதன் காரணம் அறிய விரும்பாமல் அதன் போக்கில் தன காய்களை மிகச் சரியாக நகர்த்திக் கொண்டு இருந்கிறாள்.
தீவிரமாக காலணி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் தீஜே சற்றும் எதிர்பாரா வண்ணம். உன் பெருத் தான் என்ன ? கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் நமட்டு சிரிப்போடு கண்டும் காணதது போல் அடுத்த காலணியை எடுத்து பார்த்தாள். அவன் மீண்டும் தொடர்ந்தான். உன் ஊரு என்ன ? என்றான்.
அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து எதிரில் இருந்த சால்வை கடையில் புகுந்தாள். அவனும் பின் தொடர்ந்தான்.
010 - 722162521 என்ற எண்ணை சொன்னான். அவள் தீஜேவை திரும்பிப் பார்த்தாள். அவன் ஒன்றும் நடவாதது போல என் கேலாக்சி டேப் நம்பர் எப்போ வேணுன்னாலும் மேசஞ்ஜர்ல டெக்ஸ் பண்ணலாம்.
அவள அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நடையை தொடர்ந்தாள். சால்வைகளை பார்க்க ஆரம்பித்தவளை அவன் விடுவதாய் இல்லை. சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ... உன் பேஸ்புக் என்ன ? சரி அதுக்கூட வேணாம் உன் இ - மெயில் சொல்லு .... எனக் கேட்டவாறே நின்றுக் கொண்டிருந்தவனை அவள் காதில் வங்கிக் கொள்ளவே இல்லை என்பதைப் போல் பாவனை செய்துக் கொண்டாள்.
010 - 323122167 என் ஐ போன் நம்பர் ... நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் வரலை. சோ , உங்களுக்கு இந்தக் கேள்விகெல்லாம் பதில் சொல்ல பிடிக்கலையா இல்லை சொல்லா விருப்பமில்லையானு எனக்கு தெரியலை..
எனிவேர் சோரி... என சொல்லி கவலைத் தேய்ந்த முகத்தோடு கிளம்ப ஆயோத்தமானான். அவள் அவனை கண்டுக் கொள்ளவே இல்லை.
ஆதலால், காலம் தாழ்த்தாமல் அவன் அங்கிருந்து கிளம்பியும் விட்டான். சால்வை கடையின் வாசல் வரை சென்றிருப்பான். அவள் அப்போதுதான் தலை நிமிர்ந்தாள். அவனையே பார்த்தாள். என்ன நினைத்தாலோ தெரியவில்லை மீண்டும் சால்வையில் கவனத்தை திருப்பினாள். வாசல் வரை போனவன் அவள் பெயரை உரக்க அழைத்தான். அவள் திக்கு முக்காடி விட்டாள்.
மிதர்ச்சலா மறக்காமல் கேட்ட எல்லா இன்போவையும் என் ஐ போனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணிருங்க சரியா.... !
அவள் பேந்த பேந்த விளித்து நிற்க அவன் மீண்டும் தொடர்ந்தான். ஆனால், இம்முறை தூரத்தில் நின்றப்படி அள்ள. அவளது அருகில் மிக அருகில். மிதர்ச்சலாவின் கைகளில் வெளிர் பச்சையில் சால்வை ஒன்று இருந்தது. அதை அவள் வாங்க நினைத்திருந்தாள். ஆம் தீஜேவிற்காககத்தான். அவ்வளவு சிகரத்தில் எந்தப் பட்சி வந்து சொன்னதோ அவனிடத்தில் தெரியவில்லை மிகவும் சரியாய் சொன்னான்.
ரொம்ப அழகா இருக்கு இந்த 'ஷோல்' . என்கிட்ட இருக்கற மாதிரியே இருக்கு... என சொல்லி அவள் கைகளில் இருந்த அந்த சால்வையை அவள் கைகளிலிருந்து வாங்கினான். மெல்லமாய் அதை வங்கிக் கொண்டே சொன்னான்.
வேணும்னா என்னோடையே எடுத்துக்கலாம். ஆனா, ஒரு ராட்சசி இருக்க கண்டிப்பா விட மாட்டா. அவன் அப்படி சொன்னதுதான் குத்தமாய் போய் விட்டது. பொங்கி விட்டாள் மிதர்ச்சலா.
யாரது அந்த ராட்சசி ? உங்க 'ஷோல்லே' என்கிட்ட தந்தா அவுங்க ஏன் சண்டைப் போடணும் ? அவுங்க என்ன உங்க 'கேர்ல் பிரெண்டா' ? அப்படியே கேர்ல் பிரெண்டா இருந்தாலும் அது எப்படி அவுங்க உங்கள அதை செய்யாத இதை செய்யாதன்னு சொல்ல முடியும் ?
அவளது வரிசையான கேள்விகளை இதழ்களை உள் இழுத்து இருகியப்படி மேவாய்கட்டையில் தனது இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு அடக்க முடியாத சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளது கேள்வி கணைகள் முடியும் வரை காத்திருந்தான்.
ஒருவழியாய் அவளது கேள்விகள் ஒரு முடிவுக்கு வர தீஜே அவளை நோக்கி நீங்க பாட்டுக்கு அப்படி இப்படின்னு சொல்லிட்டிங்க... ராட்சசி வேற இங்கதான் இருக்கா...
இங்கைய்யா.... என திகைத்து பதற்றத்தில் கேட்டாள் மிதர்ச்சலா.
பின்ன ராட்சசி இழுத்து வராமல் நான் எப்படி இங்க வர முடியும் ... ? ஏய் இங்க வாங்க ராட்சசிய காமிக்காறேன் ...
எனச் சொல்லி அவளை அழகாய் அவளது தோல் பட்டைகளில் கை வைத்து சுற்றும் முற்றும் பார்த்தப் படி அவளை நகர்த்திக் கொண்டே சென்றான்.
அந்த சால்வை கடையின் வலது பக்கத்தில் இருந்த நீண்ட கண்ணாடியை காண்பித்து ராட்சசிய பாருங்க !
இன்னிக்கி எவ்வளோ அழகா இருக்கா என்றான்.
வந்ததே கோவம் அவளுக்கு தீஜே என உக்குரலில் கறாராக சொல்லி தன் இரு கைகளையும் மடக்க,
ராட்சசி ஷூட் ஐ சேய் திஸ்.... யு ஆர் மை பொண்டாட்டி என சிரித்தப்படியே சொல்லி அங்கிருந்து அவளிடம் தப்பித்து ஓட ஆரம்பித்தான்.
தீஜே நில்லு....!! நிண்டிடு...சொல்லிட்டேன்... என் கோவத்தை கிளராத அப்புறம் நான் உன்னை என்ன செய்வேன்னு தெரியாது....
இப்படி சொல்லிக் கொண்டே அவனை பின் தொடர்ந்து வேக வேகமாக தன நடையை கட்டினாள். அவனோ அவளுக்கு முன் சென்றுக் கொண்டே கிண்டலாக சிரித்தான். திடிரென்று, அவனது நடைகள் அப்படியே நின்ற இடத்திலேயே நின்றது. அவனை வேகமாய் துரத்தி வந்த மிதர்ச்சலா அவன் ஓடாமல் நிற்பதை கண்டதும் அவளும் அவளது நடைகளை தளர்த்திக் கொண்டாள்.
இருந்தும் இனி தகர்த்த இயலாது, காரணம் அவனை துரத்திக் கொண்ட நேரத்தில் அவன் நடக்காமல் நின்ற இடத்திலேயே நிற்கிறான் என்பதை மறந்து விட்டு அவனது நெஞ்சுக்கு நேராய் சென்று நின்று விட்டாள்.
கொஞ்சம் எக்கி மூக்கோடு மூக்கு இடிக்காமல் இருப்பது மட்டும் தான் குறை.
அவனது கண்கள் அவளை யோசிக்க கூட விடவில்லை. அவன் கண்கள் என்பதை விட அவனது பார்வை இனம் புரியாத ஒரு தாக்கம். அப்படியே சரிந்து அவனது மடியில் விழ வேண்டும் , அவன் அவளை தாங்கி பிடித்தவாறே மீண்டும் அவள் மீது இதே பார்வையால் அவளை நிதமும் கொள்ள வேண்டும் என்றிருந்தது.
அவனது கண்கள் ஒன்றும் அப்படி பேரழகு இல்லை தான் . இருந்தும் தீஜேவுடையே கண்கள் ஆயிற்றே எப்படி அழகில்லாமல் போகும். அவனைப் போலவே இருக்கிறது அவனது பார்வையும். கொஞ்சமல்ல மிக அதிகமாகவே குறும்புத்தனம் அவனது பார்வைக்கு. என்னையே இப்படி கிறங்கடித்து இந்தளவிற்கு யோசிக்க வைக்கிறதே என்று அவளது மனம் தத்தளித்தது.
சில நொடிகள் கடந்து குறும்புகார கண்களின் சொந்தக்காரனான தீஜே மெல்லாமாய் வாய்த் திறந்தான்.
பத்திக்கும் தீப்பெட்டி !