தீப்பெட்டி ராட்சசி பாகம் 7

நா போனும் ...

போ... நா என்ன உன்ன பிடிச்சா வெச்சிரிக்கேன்.... என்றான் நாற்காலியில் அமர்ந்தவாறே.

அவனது ஒவ்வொரு சிண்டல்களுக்காகவே அவனை ஒருமுறை நிஜமாக வாயில் குத்த வேண்டும் போலிருந்தது அதுவும் நச்சென்று மிக வேகமாய் அப்போதாவது அந்த வாய் சும்மா இருக்கும் என்பதால்.

இவனிடம் ஏன் தேவையற்ற வம்பு என்று நினைத்து அங்கிருந்து கிளம்பவே முனைப்பாய் இருந்தாள். அவனும் அவளை ஏதும் சொல்லவில்லை. போகதே போ என்று எதுவும். மொத்தத்தில் அவள் அங்கு இருந்ததையே அவன் ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை. நாற்காலியில் அமர்ந்தவாறே அவன் திடிரென்று சங்கீத சுருதியோடு பாடினான் சில வரிகள்.

நீ எங்கே ...... ? தேடுகிறேன் ....
என் பக்கம் ..... வரலாம் ..... ஹ்ம்ம்....

பாடிய வரிகள் அவளின் நடைகளை நிறுத்தியது. காரணம் அது அவளுக்கும் பிடித்தமான பாடல் வரிகள் .

அவளை அறியாமல் அவளும் அவனை பின் தொடர்ந்து பாடினாள் இப்படி.

யார் எவர் என்று தெரியவில்லை...
இருந்தாலும்... ஹ்ம்ம்.... நனனனா.....

கண்கள் மூடி உணர்த்து உணர்வு பூர்வமாக பாடியப் பின்பு கண்களைத் திறந்தவள் முன் தீஜே நின்றுக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அவன் வீட்டிலிருந்து வெளியேறினாள் மிதர்ச்சலா.

நெத்தியிலே இருக்குது போட்டு....
அதற்கும் கில கள்ளச் சிருப்பு....
மொத்ததுல உனக்கிந்தப் பாட்டு...
வ வந்து ஆடு நீ .....

என கைகளை நீட்டி அவளை நோக்கி பாடியவனை திரும்பி திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே எதிரே வந்து நின்ற பேருந்தில் ஏறி அவன் கண்பார்வையிலிருந்து மறைந்தாள்.

நாட்கள் சிலவாகின. முதலில் மிதர்ச்சலாவிற்கு அனாவசியமாகத் தெரிந்த தீஜே இப்போது மிகவும் அத்தியாவசியமானவனாய் ஆகிப் போனான். அவனது பேச்சும், பாட்டும், குறிப்பாக அவனது அந்தக் குறும்புக்கார கண்களின் பார்வைகளும் அவளை அடிக்கடி அப்பப்பா என கிறங்கடிக்கும்.
தோழி ஒருத்தியின் கல்யாணம் நாளை. இன்றுதான் எதர்ச்சையாக கண்ணில் பட்டு கையில் மாட்டியது அவளது திருமண அழைப்பிதழ்.

போக வேண்டுமா என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். பிறகு, கொஞ்சம் சோம்பல் முறித்து குளித்து கிளம்பினால் அவள் தோழி ஜஸ்வினின் வீட்டுக்கு. சீக்கியர்கள் வழக்கமாய் திருமணத்திற்கு முன்னமே 1 வாரங்களுக்கு அவர்களது வீட்டை அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

அந்தக் கொண்டாடத்தில் அவளும் பங்கு கொள்ள ஆர்வமாய் கிளம்பினாலும் அவளை அறியா ஒரு உந்துதல் அவளது தோழியின் வீட்டிற்கு கண்டிப்பாய் போயே ஆகா வேண்டுமென்றே உந்தித் தள்ளியது. போய் பார்த்தால் தான் தெரியும் போல அப்படி என்ன அவளுக்கே புரியாத காரணத்தின் விடை அந்த திருமண வைபவத்தில் இருக்கிறது என்று.

ஆட்டம் பாட்டம் நிறைந்த இதுப் போன்ற விழாவில் மிதர்ச்சலா கலந்துக் கொண்டு வெகு நாற்களாகிறது. இன்று ஏனோ அதிசயமாய் வந்து விட்டாலே என அரசால் புரசலை பேசிக் கொண்டனர் அவளது தோழிகள். ரகசியமாய் கிசுகிசுத்ததாய் நினைப்பு ஆனால், அவர்கள் பேசியது அனைத்தும் இவள் காதில் விழுந்துக் கொண்டுதான் இருந்தது. இருந்தும் அதை அனைத்தயும் பொருட்படுத்தாமல் அந்த மருதாணி போடும் விழாவில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள் மிதர்ச்சலா.


பத்திக்கும் தீப்பெட்டி !

எழுதியவர் : தீப்சந்தினி (3-Mar-14, 1:49 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 151

மேலே