தீப்பெட்டி ராட்சசி பாகம் 8
ஜஸ்வின் கோர் அவளது சிறு வயது தோழி. அவளுக்குத்தான் நாளை திருமணம். சீக்கியர்களின் வழக்கப் படி மணப் பெண்ணின் கைகளில் திருமணத்திற்கு முன்பு மருதாணி போடுவது வழக்கம். இங்கும் அதே விழாக் கோலம் தான்.
இனிப்பு பதார்த்தங்களை அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள் மிதர்ச்சலா. எதிரே தீஜே. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.
அவன் கையில் கேமிரா. அவள் சந்தோஷத்தில் பிரமித்து நிறத்தை கன கசிதாமை தன் கையிலிருந்த கேமிராவில் பதிவு செய்தான் தீஜே. ஏய், வேண்டாம் என்ற அவளது செய்கையையும் சேர்த்தே படம் பிடித்தான். அவளது ஒவ்வொரு அசைவும் அன்று அந்த கேமிராவில் அழகான தொகுப்பு வரிசையாய் பதிவாகிக் கொண்டிருந்தது.
தூரதிலிருந்து யாரோ அழைத்தார்கள் அவனை தீஜே இதர் ஆஜா என்று.
அப்படி என்றால் இங்கே வா என்றுப் பொருள்படும். இவனுக்கு ஹிந்தி கூட தெரியுமோ கில்லாடித்தான். பாட்டு, கவிதை, படம், மொழி என்று ஒன்று விடாமல் வெளுத்து வாங்குகிறானே என்று அவளே அவனை நினைத்து பொறாமைக் கொண்டாள்.
அய்யய்யோ.... போகிறானே... கையில் அந்தக் கேமிராவோடு அதில் என் படங்கள் அல்லவா இருக்கிறது அதுவும் அழகான படங்கள் இல்லை அத்தனையும் இவனோடு வாக்குவாதம் புரியும் பொது அவன் கிண்டலாய் எடுத்தவை அனைத்தும் பார்க்கவே சகிக்காத நிலையில் அல்லவா இருக்கும். ஆண்டவா.. இப்போது இவள் ஓடுகிறாள் தீஜே எனக் கூவிக் கொண்டு.
அங்கே சென்றால் அவனோடு யாரோ ஒரு பெண்மணி ஹிந்தியில் பேசிக் கொண்டு இருந்தார். இவனும் சும்மா இல்லைப் போல அப்படிதான் பேசுகிறான் ஹிந்தி. முதலில் அவனது திறமைகளை பொறாமைப்பட்டவள் இப்போது பெருமைப்படுகிறாள்.
பேசிமுடிக்கும் வரை அவனுக்காய் காத்திருந்தவள் அவன் பேசி முடித்ததும் அவனை சிரித்த முகத்தோடு பார்த்துக் கொண்டு எண்ணப் பேசுவது என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.
அவனும் அவளை பார்க்க என்னோ தெரியவில்லை அவளை நாணம் கவ்விக் கொண்டது அவளை அறியாமல் அவனது குறும்புக் கார பார்வைகளை தவிர்க்க முடியாமால் வலப்பக்கமாய் தன் தலையை கிழே குனித்துக் கொண்டாள்.
நீ எப்படி இங்க ? நாணத்தின் ஊடே பிறந்தது ஒரு கேள்வி அவளிடமிருந்து.
அன்பே... அன்பான குத்துவிளக்கே என்னை வரவைத்தாய் ... எனச் சொல்லி சிரித்து அங்கிருந்து மெல்லமாய் பின் நோக்கி ஓட ஆரம்பித்தான்.
அப்போதுதான் அவளுக்கு அவனது கையில் இருந்த கேமிரா ஞாபகம் வந்தது. அதற்காகத் தானே இவ்வழு நேரம் காத்திருந்தாள். தீஜே பிளிஸ் என் போட்டாலாம் தந்திரு ... அது எல்லாம் அழகாவே இல்லே என அவள் சொல்வதை கூட அவன் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளாமல் அவளை ரசனையோடு மீண்டும் படம் பிடித்தான். ஆத்திரம் வந்து விட்டாள் அவனை துரத்த ஆரம்பித்து விட்டாள்.
வா... வா... வந்து துரத்து ... எனச் சொல்லிக் கொண்டே ஓடிய தீஜே அங்கே ஒரு ஓரமாய் வைக்கப்பட்டிருந்த மைக்கை அவன் கையில் எடுத்தான்.
பாரு என் சுந்தரி... கோவக்காரி பெண்ணு நீ...
மெல்ல வந்து கட்டிப்பிடி ...
வருங்கால மனைவி.....
என்றவனை அவள் மட்டுமில்லை அவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். மிதற்சால பேச்சிழந்து நின்றாள்.
மைக்கில் பேச ஆரம்பித்தான் தீஜே. ஹாய் எவரி ஒன். ஐம் தீஜே தேஜஸ்வின் சிங். அவன் சொல்லி முடித்தான்.
தீஜே தேஜஸ்வின் சிங் ஆ.... கண்கள் விரிய அப்படியே அதிர்ச்சியில் அவளை அவளே கேட்டுக் கொண்டாள்.
அடப்பாவி.... உன்ன இத்தனை நாளா தமிழப் பையன்ல நான் நினைச்சேன் என்றது அவள் மனது.
அடப்பாவி.... உன்ன இத்தனை நாளா தமிழ் பையன்ல நான் நினைச்சேன் என்றது அவள் மனது.
இன்னிக்கி என் வாழ்க்கையிலே ரொம்ப ரொம்ப சந்தோசமான நாள். எஸ்... மை பிலோவர்ட் பெஸ்ட் ப்ரெண்ட் மிஸ் ஜஸ்வின் மிர்சஸ் ஜஸ்வின் ஆகா போற இந்த நாள் அவளுக்கு மட்டுமில்ல எனக்கும் ஒரு இஸ்டரியான நாள்தான்.....
எனச் சொல்லி மிதர்ச்சலாவை கை காண்பித்தான். அவள் ஒன்றும் தெரியாதவள் போல் பேசமால் நின்றுக் கொண்டிருந்தாள். இருப்பினும், அவளது சின்ன இதயம் படக் படக் கென்று அடிக்கும் ஒலி வெளியே வரை கேட்பதை அவள் உணராமல் இல்லை. அவளை அறியாமல் உடலில் ஒரு நடுக்கம்.
மேடையில் நின்று தன்னை கை காட்டியவன் பக்கத்தில் வந்து விட்டால் அதுவும் கையில் மைக்கோடு. ஆண்டவா என்னைக் கொஞ்சம் காப்பாற்றேன். சத்தமின்றி இதயம் இறைவனை பிரதித்தது.
எனச் சொல்லி மிதர்ச்சலாவை கை காண்பித்தான். அவள் ஒன்றும் தெரியாதவள் போல் பேசமால் நின்றுக் கொண்டிருந்தாள். இருப்பினும், அவளது சின்ன இதயம் படக் படக் கென்று அடிக்கும் ஒலி வெளியே வரை கேட்பதை அவள் உணராமல் இல்லை. அவளை அறியாமல் உடலில் ஒரு நடுக்கம்.
மேடையில் நின்று தன்னை கை காட்டியவன் பக்கத்தில் வந்து விட்டால் அதுவும் கையில் மைக்கோடு. ஆண்டவா என்னைக் கொஞ்சம் காப்பாற்றேன். சத்தமின்றி இதயம் இறைவனை பிரதித்தது.
பட்டென்று அங்கிருந்து ஏதும் தெரியாதவள் போல் நடையை வேறு பக்கம் திருப்பினாள். தட்டொன்றை எடுத்து இனிப்பு பதார்த்தகளை அதில் மும்முரமாய் அடுக்க ஆரம்பித்தாள். அருகில் ஒரு குரல்.
‘நான் சொல் பேச்சை கேட்காத தீஜே வா...?
நீ சொல் பேச்சை கேட்காத மிதர்ச்சலாவா...?
நீ பார்க்காமல் போன நான் விடுவேனா ?
நீ சிரிக்காமல் போனா நான் அழுவேனா ?’
பத்திக்கும் தீப்பெட்டி !