தீப்பெட்டி ராட்சசி பாகம் 9

வெட்கத்தோடு கலந்த சிரிப்பால்அழகாய் விழுந்த கன்னக் குழிகள் தீஜேவை அவளை இன்னோர் முறை சுற்றி பார்க்க வைத்தது. தீஜே உண்மையில் என்னதான் செய்ய வருகிறான் என்பதை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. நினைக்க நினைக்க திகட்டாமல் இனிக்கின்றானே.

காரணம் தான் புரியவில்லை. அவனைத் திட்டக் கூட இயலவில்லை. ஒரு நொடி நேராய் அவனை பார்க்க நினைத்தது அவளது மனம். சிரித்த முகத்தோடு அவனையே பார்த்தாள். அவனும் பார்த்தான்.

‘எப்படியோ ...... தீஜே தேஜஸ்வின்.... சோரி சோரி.... தீஜே தேஜஸ்வின் சிங்.... யுகே பிரபலமான தீஜேவோடு சோங்கஸ் எல்லாம் பாடி இந்த மிதர்ச்சலாவை எப்படியோ சைட் அடிச்சாச்சி.... அடுத்து எண்ணப் பண்ணப் போறீங்க சார்.... ??’

என்றாள் மிடுக்காக. அவனும் அவளுக்கு சளைத்தவன் இல்லை என்பதற்கு ஏற்ப நக்கல் கலந்த சிரிப்போடு

‘என் மனசுகிட்ட கேட்டேன் இந்தப் பொண்ணு எனக்கான்னு... அது சொன்னுச்சி முன்ஜென்மம் அவளப் பார்த்த ஞாபகம்.... உன் மனசில் நிச்சயமாய் அவள் தான் இருக்கிறான்னு....’

மிதர்ச்சலாவிற்கு அவனது பதிலும் அதற்கான அவனது பாவனைகளும் சிரிப்பை வர வலைத்தது. இருப்பினும், சுதாகரித்துக் கொண்டு சிரிப்பை அடக்கியே நின்றாள். தீஜே என்றொரு குரல் துரத்திலிருந்து. குரல் வந்த திசையைத் திரும்பி பார்த்து கை அசைத்தவன் மீண்டும் அவளிடம் திரும்பி,

‘நீயே என்ன விட்டாலும் நான் உன்னை விட மாட்டேன்....’

சொல்லி விட்டு அவளை பார்த்துக் கொண்டே பின்னோக்கி குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.

கைகளை சொடக்கு போட்டு அவனை திரும்பி பார்க்க வைத்தாள் மிதர்ச்சலா.

அவன் நின்ற இடத்திலேயே நின்றிருந்தான். மிதர்ச்சலா அவனை நோக்கி நடந்து சென்றாள். அவன் காதருகில் சென்று,

நா சிகே மூல நெத்தி அந்தரிலோ சிண்டேய்னா...
மனசே இஸ்தே மேடி முசு குண்டுன் செய்யன்னா...
சூப்புளுத்தோ நின்னே நாளோ களிப்பின்னு டியன்னா...
நேனுஸ்தா நீ வெனக்கா....

என்று சொல்லி விட்டு அவனிடமிருந்து சிரித்தப்படியே அங்கிருந்து நழுவினாள்.

அடியே....! என தன் முன் கொஞ்ச தூரம் நடந்து சென்றிருந்த மிதர்ச்சலாவைப் பார்த்து அலறினான் தீஜே. என்ன என்பதை துரத்தில் நின்றவாறே கண்ணின் புருவங்களை மேலே தூக்கியவாரே கேட்டாள் அவள்.

‘என்னடி கன்றாவி அது ??’ என்றான் கண்களை பெரிதாக்கி தன் இருக் கைகளையும் இடுப்பில் வைத்தவாறே.

‘எது ?’

‘அதான் இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஏதோ புரியாத மொழியிலே கேட்ட வார்த்தை எல்லாம் சொன்னாயே அது ?!’

‘நீ தான் கவிதைப் புலி ஆச்சே... தமிழ், ஹிந்தினு பின்றையே... இதுவும் அது மாறித்தான்....என்ன இது கொஞ்சம் தெலுங்கு வெர்சன் முடிஞ்சா கண்டு பிடிச்சி நல்ல பதிலா சொல்லு சரியா....’

என்று விட்டு அவன் கண்களிலிருந்து ஓடி மறைந்தாள்.

அந்த நாள் அவர்கள் இருவரின் மனமும் ஒன்று சேர்ந்த சுபநாள். தீஜே அவள் மனதில் நாற்காலி ஒன்றில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து விட்டான் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டாள். அவனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள் மிதர்ச்சலா.

அன்றிலிருந்து இன்றுவரை தீஜே அதன் அர்த்தம் என்ன என்றுக் கேட்டு மிதர்ச்சலாவை நச்சரிக்காத இரவுகளை கைகளை விட்டு என்னலாம். அப்படி ஒரு ஆர்வத்தோடு அவளை விடியற்காலைக் கூடா எழுப்பி அதன் அர்த்தத்தை கேட்பான். திருமணம் ஆகி வருடம் 1 ஆகி விட்ட போதும் அவன் பிரச்னை இன்னமும் தீரவில்லை.

இறுக்கம் தளர்ந்து தீஜேவின் கைகள் மிதர்ச்சலாவின் பளிங்கு முகத்தை தன் இருக் கைகளால் ஏந்தினான். முழுமதியாய் பூத்திருந்த மிதர்ச்சலாவின் கேசத்தை கோதி அவளது நெற்றியில் அன்பு முத்தம் வைத்தான் தீஜே.


முற்றும் .

எழுதியவர் : தீப்சந்தினி (3-Mar-14, 2:04 pm)
பார்வை : 179

மேலே