பேரறிஞர் அண்ணாவின் அரசியல் நையாண்டி

கீழ்க்காணும் அரசியல் நையாண்டி என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய என் தந்தை அவர்களிடம் நான் கேட்டு மிகவும் வியந்த ஒன்றாகும். அதனை இவண் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்.

1967ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்திருந்த நேரத்தில் ஒரு காங்கிரசுக் கட்சி ஆதரவு இதழில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கேலி ஓவியம்(Cartoon) ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அக்கேலி ஓவியத்தில் அண்ணா அவர்கள் கழுதையின் மீது ஏறிச் சென்று கோட்டையைக் கைப்பற்றுவதாக வரையப்பட்டிருந்தது.

இதனைப் பற்றி அண்ணாவின் கருத்து என்னவென்று அவரிடம் இதழியலாளர்கள்(Journalists) வினவியபோது, அண்ணா உடனே பின்வருமாறு பதிலளித்தார்:

"நான் இது நாள் வரை கோட்டையைக் கைப்பற்றுவது ஒரு கடினமானச் செயல் என்றே கருதியிருந்தேன். ஆனால், காங்கிரசு நண்பர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை கழுதை மேல் ஏறிச் சென்றாலே போதும் எளிதில் கோட்டையைப் பிடித்து விடலாமென எனக்கு இக்கேலி ஓவியத்தின் மு°லம் தெரிவித்துவிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!"

எழுதியவர் : Yaazhini குழலினி (5-Mar-14, 10:25 am)
பார்வை : 206

சிறந்த நகைச்சுவைகள்

மேலே